Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனுமனுக்கு உகந்த வெற்றிலை மாலை

Advertiesment
அனுமனுக்கு உகந்த வெற்றிலை மாலை
இலங்கையில் ராமனுக்கும், ராவணனுக்கும் யுத்தம் நடைப்பெற்ற போது அரக்கர்களை பந்தாடி போர்களத்தில் வெற்றிக்கொடி நாட்டியவர் அனுமான்.


 

 

 
அதனால் தான் அவருக்கு கொடியிலேயே வளரும் வெற்றிலையை மாலையாக போடுகிறார்கள். ஈலங்கையில் அசோகவனத்தில் சீதா பிராட்டியார் சிறைப்பட்டு இருந்த போது ராமதூதனாக சென்ற அனுமன் சீதையை சந்தித்து, ராமர் விரைவில் இலங்கை வந்து உங்களை சிறைமீட்டுச் செல்வார் என்று கூறினார். 
 
இதைக் கேட்டு மகிழ்ந்து போன சீதை அருகில் இருந்த வெற்றிலை கொடியில் இருந்து வெற்றிலையை பறித்து அனுமானின் சிரசில் போட்டு சிரஞ்சீவியாக இருப்பாயாக என்று கூறி ஆசி வழங்கினார்.
 
இதை நினைவுகூரும் விதத்தில் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டி அனுமானுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil