Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக கூறப்படும் நிகழ்வுகள் என்ன...?

மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக கூறப்படும் நிகழ்வுகள் என்ன...?
Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (08:12 IST)
மனிதர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தை முதல் ஆனி வரையுள்ள காலம் பகல் எனவும், ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலம் இரவு எனவும் ஆகும். 

 
இதன்படி தேவர்களுக்கு இரவுக் காலம் முடிகிற வைகறைப் பொழுது, மார்கழி மாதமாகின்றன.மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேரத்தைக் குறிக்கும்.சூரிய உதயத்துக்கு  முன்பான இந்தக் காலம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும்.
 
அதுபோலவே மார்கழி மாதத்தில் பல புராதன நிகழ்வுகளும் நடந்துள்ளன. மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது. திருப்பாற்கடல் கடையப்பட்டபோது, முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் இதே மார்கழி மாதத்தில் தான்.
 
இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது,கோவர்த்தனகிரி மலையை,கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில் தான் என்பது வரலாறு சொல்லும செய்தி.
 
எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டாள் நாள் தோறும் வைகறையில் எழுந்து ஒவ்வொரு பாசுரமாகப் பாடி,திருமாலை திருப்பாவையால் திருவடித் தொழுது,திருமணம் புரிந்ததும் மார்கழி மாதம் என்னும் சிறப்பு மிக்க மாதத்தில் தான்.
 
சிதம்பரத்தில் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும்,ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியும் மிக முக்கியமான விசேஷங்களுள் ஒன்று.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – விருச்சிகம்! | January 2025 Monthly Horoscope viruchigam

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – துலாம்! | January 2025 Monthly Horoscope Thulam

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா! இன்று மாலை கோலாகல தொடக்கம்!

1 லட்சத்து 8 வடைகளால் பிரம்மாண்ட மாலை! நாமக்கல் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்!

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கன்னி! | January 2025 Monthly Horoscope Kanni

அடுத்த கட்டுரையில்
Show comments