பழனி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேகம்: அமைச்சர்கள் பங்கேற்பு!

Mahendran
திங்கள், 8 டிசம்பர் 2025 (18:59 IST)
முருகக் கடவுளின் மூன்றாம் படைவீடான பழனியில் உள்ள திருஆவினன்குடி திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா இன்று  கோலாகலமாக நடைபெற்றது.
 
யாகசாலை பூஜைகளை தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்குப் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இந்த மங்களகரமான நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உட்பட பலர் பங்கேற்றனர்.
 
இந்த விழாவில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'முருகனுக்கு அரோகரா' என்று பக்தி முழக்கங்களை எழுப்பி முருகப்பெருமானை வழிபட்டனர். கும்பாபிஷேகத்தின்போது வானில் மலர்கள் தூவப்பட்டு, விழா மேலும் சிறப்படைந்தது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவண்ணாமலை கிரிவலம்: இந்த மாத பௌர்ணமிக்கான உகந்த நேரம் அறிவிப்பு!

ஞானம், கல்வி அருளும் கும்பேஸ்வரர்: கும்பகோணம் ஆலயச் சிறப்புகள்!

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில்: நாய் வாகனமில்லா யோக பைரவர் தரிசனம்

மலைபோன்ற சிக்கல்களை தீர்க்கும் கரியமாணிக்கப் பெருமாள் திருத்தலம்!

திருப்பதி வைகுண்ட துவார தரிசனம்: 10 நாள் வழிகாட்டுதல்கள் வெளியீடு – சலுகைகள் ரத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments