Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆரோக்யத்துடன் அஷ்ட ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்

ஆரோக்யத்துடன் அஷ்ட ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்
, சனி, 30 டிசம்பர் 2017 (17:49 IST)
தன்வந்திரி பீடத்தில் புத்தாண்டில் ஆரோக்யத்துடன் அஷ்ட ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்.

 
யாகம் செய்வதினால் ஏற்படும் நன்மைகள்.......
 
ஒரு மனிதன் தன் வாழ்வில் நிறைந்த ஆசியோடு வாழ்வதற்கு இறை பக்தி தேவை. இதற்கு உதவுபவையே ஹோமங்கள் எனப்படும் சாந்திகள். இறைவனை பக்தியோடு வணங்கிய பின் நாம் எதைக் கேட்டாலும் (நியாயமான கோரிக்கைகள்) அவற்றை நமக்குத் தந்தருளத் தயங்க மாட்டார். மேலும் தேக ஆரோக்கியம், செல்வ வளம், மன நிம்மதி, பரிபூரண ஆயுள், நிரந்தர வேலை, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை தீர்த்தல், வியாபார அபிவிருத்தி என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவைப்படுவதைப் பெறுவதற்கு ஹோமங்கள் பேருதவி புரிகின்றன.
 
வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி  உலக நலன் கருதி வருகிற ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு 01.01.2018 திங்கள் கிழமை, காலை 10.00 மணியளவில் கீழ்கண்ட ஐந்து ஹோமங்கள் நடைபெறவுள்ளது.
 
1. கல்வியில் சிறந்து விளங்க ஸ்ரீ சரஸ்வதி ஹோமம்.
 
2. பில்லி சூனியம், எதிரிகள் விலக மஹா சுதர்ஸன ஹோமம்.
 
3. ஆயுள் பயம் நீங்க ஆயுஷ்ய ஹோமம்.
 
4. நீண்ட ஆயுள் பெற மஹா தன்வந்திரி ஹோமம்.
 
5. வாழவில் வளம் பெற குபேர லட்சுமி ஹோமம்.
 
ஆகிய ஐஸ்வர்யம் தரும் 5 ஹோமங்களாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு காலை கோபூஜையும், கணபதி ஹோமமும், வேத பராயணமும், கலச பூஜையும், சிறப்பு அர்ச்சனையும், ப்ரார்த்தனையும் நடைபெறவுள்ளது. பக்தர்கள் மற்றும் மாணவ மாணவிகள் இந்த யாகங்களில் பங்கு கொண்டு அதிக மதிப்பெண் பெறவும் மக்கள் பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லை, நோய்கள், நீங்கி ஆயுள் ஆரோக்யத்துடன் குபேர சம்பத்து பெற்று வாழ பிரார்திக்கின்றோம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.


Blessings from  Kayilai Gnanaguru Dr. Sri Muralidhara Swamigal
FOUNDER
Sri Danvantri Arogya Peedam,
04172-230033, 0944330203

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாஸ்து தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்!!