வறண்ட கூந்தல் உடையவர்கள் அடிக்கடி எண்ணெய் மசாஜ் செய்து பராமரித்து வரவேண்டும், எண்ணெய்யைச் சூடாக்கித் தலை ஓட்டில் படும்படி விரல் நுனிகளால் அழுத்த தடவி 10 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும்.
இதனால் ரத்த ஓட்டம் அதிகமாகி எண்ணெய் சுரப்பிகளின் செயலும் துரிதப்படம். மேலும் உடல் உஷ்ணம் குறைக்கப்பட்டு குளிர்ச்சி தன்மை அடையும் ,வறண்ட கூந்தலுடையவர்கள் முட்டை ஷாம்பு அல்லது நெல்லிக்காய் ஷாம்பு பயன்படுத்தினால் நல்ல பலனை பெறலாம் .
வறண்ட கூந்தலுக்கு மசாஜ் செய்ய கற்றாழை எண்ணெய் நல்லெண்ணெய் செம்பருத்தி எண்ணெய் பயன்படுத்தினால் முடிக்கு வறண்ட தன்மை நீங்க எண்ணெய் சத்து கிடைகும். மசாஜ் செய்வதற்கு முன் துவாழையினால் ஆவி ஒத்தடம் கொடுப்பது நல்லது.
தலைக்கு குளித்த பின் கடைசியில் சிறிதளவு கருப்பு வினிகர் , எலுமிச்சை சாறு இவற்றை நீரில் கலந்து அலசினால் நல்ல பலன் கிடைக்கும். பாலேடுள்ள பாலில் ஒரு முட்டையை நன்கு நுரை வரும் வரை அடித்து தலையில் தரவி 20 நிமிடம் ஊற வைத்து பின் அலசவும். வாரத்திற்கு இரண்டு முறை இவ்வாறு செய்தல் நன்கு பலன் காணலாம்.
தலையில் நல்லெண்ணெய் தேய்த்துச் ஊறவிட்டு அரை மணிநேரம் கழித்து சாதம் வடித்த கஞ்சியில் சிறிது சிகக்காய்த் தூள் போட்டு கலக்கி அதைத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர கூந்தல் உதிர்வது நின்று நன்கு வளரும்.