குளிக்கும் தண்ணீரில் 3 அல்லது 4 சொட்டு தேங்காய் எண்ணெய் விட்டு குளித்து வந்தால் வறண்ட சருமம் மேலும் ஆகாமல் இருக்கும்.
மஞ்சள் தேய்த்து முகத்திற்கு தினமும் குளித்து வந்தால் சருமம் சுருக்கம் வராமல் இருக்கும்.
பச்சை பயிறை வெயிலில் காயவைத்து அரைத்து பொடியாக்கி முகம் கழுவும்போது அதை தேய்த்து முகம் கழுவி வர முகம் மிருதுவாகவும், பொலிவாகவும் முகபரு வராமலும் இருக்கும்.
முகக்கருமை நீங்க 2 டீஸ்பூன் சர்க்கரை, கற்றாழ ஜெல் 1 டீஸ்பூன், பால் 2 டீஸ்பூன் மூன்றையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் போல் கலக்கி முகத்தில் 15 நிமிடம் தேய்க்க வேண்டும். பிறகு ஈரத்துணியால் துடைக்கவேண்டும்.
வறண்ட சருமம் உள்ளவர்கள் ஆரஞ்சி பழமும், தேனும் கலந்து முகத்தில் தடவி வர சருமம் மிருதுவாக மாறும். மேலும் எண்ணெய் பசை உள்ள முகத்திலும் தடவி வந்தால் சருமம் பொலிவு பெறும்.
முகத்தில் உள்ள எண்ணெய் தேவையற்ற முடிகளை அகற்ற எலுமிச்சை சாரை அடிக்கடி முகத்தில் தடவினால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
ஆரஞ்சி பழத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி அதை முகத்தில் தடவிய பிறகு 15 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவிய பிறகு 5 நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும்.