Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாத நகங்களை பராமரிப்பதற்கான எளிய இயற்கை குறிப்புகள் !!

Advertiesment
பாத நகங்களை பராமரிப்பதற்கான எளிய இயற்கை குறிப்புகள் !!
நகங்களுக்கு எண்ணெய் நகங்களை வெட்டும் முன் எண்ணெய்யை தடவி விட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

பாத வெடிப்பு பாத வெடிப்பிருந்தால் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பெடிக்யூர் செய்து கொள்ளலாம். சொரசொரப்பான கற்களை கொண்டு பாதங்களை தேய்த்து குளித்து வந்தாலோ அல்லது ஸ்கிரப் பயன்படுத்தினாலோ உங்களது பாதங்களில் உள்ள இறந்த செல்கள் புதுப்பிக்கப்படும். பாதமும் மென்மையாக இருக்கும்.
 
பாதங்களுக்கு உப்பு, ஷாம்பூ, எலுமிச்சம் பழச்சாறு கலந்த வெந்நீரில் கால்களை ஊறவைத்துக் கழுவலாம். இதனால் பாதங்கள் சுத்தமாக இருக்கும். பாதங்களில் உள்ள அழுக்குகள் மற்றும் நகங்களை சுத்தமாகும். கால்களுக்கு இதமாகவும் இருக்கும்.
 
பாத வெடிப்புகள் பாதத்தில் உள்ள வெடிப்புகள் பாதங்களை அசிங்கமாக காட்டும். மேலும் இதன் வலியாக சில தொற்றுகளும் பரவலாம். அதுமட்டுமின்றி இது வலியையும் உண்டாக்கும். பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க விளக்கெண்ணை ஒரு ஸ்பூன், பன்னீர் இரண்டு ஸ்பூன், எலுமிச்சம் சாறு ஒரு ஸ்பூன் மூன்றையும் கலந்து வெந்நீரில் பத்து நிமிடம் கால்களை ஊறவிட்டு, பின்பு இக்கலவையைப் பூசிவர வெடிப்பு நீங்கும்.
 
நகம் வெட்டுவதற்கு முன்பு நகங்களை வெட்டுவதற்கு முன்னால் நகங்களை மிதமான சூடுள்ள நீரில் சிறிது நேரம் ஊற வைத்து வெட்டுவதனால் மிகவும் எளிமையாக நகங்களை வெட்டலாம். அல்லது தேங்காய் எண்ணெய்யை தடவி மசாஜ் செய்து வெட்டினாலும், எளிமையாகவும், பிடித்த வடிவத்திலும் நகங்களை வெட்டலாம்.
 
உருளைக்கிழங்கு நீர் உருளைக்கிழங்கை வேகவைத்த நீரில் கைகளை ஊற வைத்து தேய்பதாலும், உருளைக்கிழங்கு தோலை கைகளின் மீது தேய்பதாலும் விரல்கள் மிருதுவாகவும் அழகாகவும் மாறும். விரல்கள் பளபளப்பாக இருக்கும். இதை செய்யாதீர்கள் ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால், நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள்.
 
நகங்கள் பளபளக்க கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். அதே போல், பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். மாத்திற்கு ஒரு முறை இப்படி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும் நெல்லிக்காய் !!