Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் எளிய அழகு குறிப்புகள் !!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (17:50 IST)
தக்காளிப் பழத்தை தோல் நீக்கி அதனை நன்கு அரைத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்திற்கு பூசவும். இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச்சென்று மாறிவிடும்.

தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும். மேலும் இந்த முறையை தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.
 
சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி சரும துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி  சருமம் பொலிவோடு காணப்படும்.
 
தேங்காய் தண்ணீரைக் கொண்டு தினமும் இரண்டு முறை முகத்தை மசாஜ் செய்து 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகத்தில் உள்ள தழும்புகள் கருமை நீங்கி முகம் பளிச்சென்று வெள்ளையாகும்.
 
சரும ஆரோக்கியத்தையும் அழகையும் மேம்படுத்த மேற்கூறிய அழகு குறிப்புகளை செய்வதோடு தினசரி நாம் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும். அடிக்கடி தண்ணீரை குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பசித்த பின் புசி.. பசிக்காமல் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்..

சிவனின் அருளைப் பெற உதவும் சிவ நமஸ்காரம் எனும் அற்புத யோகப் பயிற்சி!

வெரிகோஸ் வெயின் நோய் யாருக்கு அதிகம் ஏற்பட வாய்ப்பு?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

தலைமுடி வளர என்னென்ன வைட்டமின்கள் தேவை?

அடுத்த கட்டுரையில்
Show comments