Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சருமம் தொடர்பான பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு தரும் கற்றாழை..!!

Webdunia
கற்றாழையின் சோற்றைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும். முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் தான் வயதான தோற்றத்தை கொடுக்கும். இந்த வயதான தோற்றத்தை தடுப்பதில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது.

சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.
 
வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண் ஆறும். கற்றாழை முகத்தை பொலிவை தருவதோடு இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை புத்துயிர் பெற செய்கிறது. கற்றாழையை தொடர்ந்து பயன்படுத்துவதால் தோல் மிருதுவாக இருக்கும் என்பதை ஆராய்ச்சிகள் மூலமும் நிருபித்துள்ளனர்.
 
கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து  ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.
 
இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும். கற்றாழையின் ஜெல்லானது அதிகப்படியான நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டுள்ளதால் சருமத் தொடர்பான பிரச்சனைகளை எளிதில் கட்டுப்படுத்துகிறது. 
 
மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது.
 
கற்றாழை ஜெல்லில் அதிகப்படியான நோய் எதிர்ப்புச் சக்திகள் உள்ளது. இது புறஊதாக் கதிர்களிடம் இருந்து நம் சருமத்தினைக் காக்கிறது. சரும நோய்களுக்கும்  இது சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தக்காளியில் இருக்கும் வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

முழங்கால் செயற்கை தசைநார் சிகிச்சை! தமிழகத்தில் முதலிடம்! – ரெலா மருத்துவமனை!

சோம்பை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் பயன்கள்..!

பிரைடு ரைஸ் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு ஏற்படும் தீங்குகள்..!

உடலுக்கு தேவையான புரதச் சத்துக்கள் உணவுகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments