Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேப்பம் பூவின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்...!

Advertiesment
வேப்பம் பூவின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்...!
தென்னிந்திய சமையலில் வேப்பம்பூக்களுக்கு முக்கிய பங்குண்டு. தமிழ்நாட்டில் சித்திரை வருடப்பிறப்பன்றும், ஆந்திரா, கர்நாடகாவில் யுகாதி அன்றும் வேப்பம்பூவை ரசம் வைத்தும், பச்சடியாகவும் உட்கொள்கின்றனர். மலர்கள் கடுமையான வயிற்று வலியையும் போக்கும் குணம் கொண்டவை.
பித்தம், வாதம், கபம் ஆகிய மூன்று நோய்களையும் சமன்படுத்த வேப்பம்பூ பயன்படுகிறது. ஒரு கைப்பிடியளவு வேப்பம்பூவை எடுத்து உலர்த்தி பொடி செய்து கால்  டம்ளர் நீரில் சிறிது தூளைக் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம், வாதம், கபம் சமனப்படும்.
 
வேப்பம்பூவை நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு வற்றல்குழம்பு, மிளகுரசம் தயார் செய்யும்போது சிறிது வேப்பம்பூவைச் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர வயிறு  உப்பிசம்,பித்தம், வாதம் தொடர்புடைய நோய்கள் நீங்கும். கல்லீசரல் பாதுகாக்கப்படும்.
 
வேப்பம்பூ பொடியில் தேன் கலந்து தினம் 2 வேளை வீதம் மூன்று நாட்கள் உட்கொண்டு வந்தால் பித்தம் காரணமாக எற்படும் வாய்க்கசப்பு, வாந்தி, மயக்கம்,  போன்ற தொல்லைகள் நீங்கும். உலர்ந்த வேப்பம்பூவை கறிவேப்பிலையோடு துவையலாக்கி சாப்பிட, பித்தம் தொடர்பான சகல பிணிகளும் நிவர்த்தியாகும்.
 
வேப்பம்பூவை தண்ணீரில் ஊறவைத்து அதனை குடித்து வர உடல் பருமன் குறையும். இது அல்சரையும் குணமாக்கும். உடலை வலுவாக்குவதில் வேப்பம் பூக்களின்  பங்கு முக்கியமானது. தினம் இருவேளை வேப்பம்பூ பொடியை சாப்பிட காய்ச்சல் நீங்கும்.
 
வேப்பம் பூவை வாட்டி தலையில் கட்டி வைத்தால் தலையில் உள்ள பேன், ஈறு, பொடுகு முதலியவை தீரும். இதை தலையின் உச்சியில் வைத்துக் கட்டினால் தலைபாரம் நீங்கி சுகமாக இருப்பதோடு கூந்தலும் செழித்து வளரும்.
 
வேப்பம்பூவைக் காய்ச்சி, இந்த கஷாயத்துடன் நெல்லிக்காய் சாற்றையும், தேனையும் கலந்து உட்கொண்டால் சரும நோய்கள் நீங்கும். வேப்பம் பூவையும், எள்ளையும் அரைத்துக் கட்டினால் கொடிய கட்டிகளும் உடனே உடைந்துவிடும். வேப்பம்பூ கஷாயத்தை சிறிதளவு காலையிலும், மாலையிலும் குடிக்கச் செய்தால் குழந்தைகளின் வயிற்றுக் கோளாறுகள் அகன்று வயிறு சுத்தப்படும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் காரணங்களும் அதனை போக்கும் வழிகளும்...!