வெள்ளரிக்காயில் அதிக அளவு ஈரப்பதம் உள்ளது. எனவே, இரவு தூங்க செல்லும் முன்பு வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி விடவும். பின்பு காலை, எழுந்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வந்தால் முகம் பொழிவுடன் காணப்படும்.
பாதாம் எண்ணெய்யிலும் ஈரப்பதம் உள்ளது. எனவே, இதனையும் இரவு முகத்திற்கு தடவி மசாஜ் செய்து காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வரலாம்.
பப்பாளி முகத்திற்கு குளிர்ச்சியை கொடுக்கும்.பப்பாளி துண்டுகளை நன்கு மசித்து முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் முகம் பளிச்சிடும்.
தோலில் எண்ணெய், இறந்த செல்கள், பாக்டீரியாக்கள், முகப்பருக்கள் ஆகியவற்றை நீக்க வேம்பை பயன்படுத்துவது நல்லது. வேம்பின் இலையை அரைத்து சோப் போல பயன்படுத்தலாம். வேம்பில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பிகள், தோலின் நுண்ணுயிற்களை அழித்து முகம் பொலிவாக இருக்கும். முகத்தில் உள்ள கரும் புள்ளிகளை நீக்கவும் உதவும். சுருக்கங்களை நீக்கவும் வேம்பில் சக்தி உள்ளது.
தக்காளி சாருடன் 1 ஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கருமை நீங்கி வெண்மை நிறம் வெளிப்படும்.
உருளைக்கிழங்கு சாறு எடுத்து உதடு மற்றும் கன்னத்தை சுற்றி தடவி வர கருமை நீங்க சிறந்தது. லெமன் ஜுஸ் & ரோஸ் வாட்டர் சேர்த்து தடவி 10 நிமிடத்திற்கு பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
பாதாம் பருப்பை நன்கு அரைத்து சிறிதளவு தேன்,எலுமிச்சை சாறு கலந்து தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளிச்சிடும்.