Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உடலில் உள்ள அனைத்து உறுப்புகளில் தேங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் சோற்று கற்றாழை !!

Advertiesment
உடலில் உள்ள அனைத்து உறுப்புகளில் தேங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் சோற்று கற்றாழை !!
, திங்கள், 14 மார்ச் 2022 (09:42 IST)
அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது.


சோற்று கற்றாழை பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஓர் பேரினமாகும். கற்றாழை லில்லியேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனவும் அழைக்கப்படுகிறது.

சித்த மருந்துவர்களால் ‘குமரி’ என்றழைக்கப்படுகிறது. இது ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் வளர்கின்றன. நுனியில் பெரும்பாலும் சிறு முட்கள் காணப்படும். மடல், வேர் ஆகியவை மருத்துவப் பயனுள்ளவை.

தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தோல் நீக்கிய கற்றாழை தண்டுகளை நன்கு அரைத்து, முகம் முழுவதும் பூசி கால் மணிநேரம் அல்லது அரைமணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகத்தில் இருக்கும் எண்ணெய் தன்மை நீங்கி முகம் பொலிவு பெறும்.

ஈறுகள் மற்றும் பற்கள் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியமாகும். தோல் நீக்கிய கற்றாழை தண்டுகளை சிறிதளவு மென்று சாப்பிட்டு வந்தால் ஈறுகள் பலம் பெறும். பற்களில் சொத்தை ஏற்படுத்தும் கிருமிகளை அழிப்பதிலும் கற்றாழை உதவுகிறது.

கற்றாழையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளில் தேங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி உடல்நலத்தை மேம்படுத்துகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகம் பளபளப்பாக வைத்துக்கொள்ள சில இயற்கை மருத்துவ குறிப்புகள் !!