Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முடி வெ‌ட்டுவத‌ற்கான முறை

Advertiesment
அழகு குறிப்பு
, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2009 (15:46 IST)
வீ‌ட்டிலேயே முடி வெட்டும் போது, தேவையான அளவை விட ஒன்று அல்லது இரண்டு அங்குலம் அதிகமாக வைத்து வெட்டவும்.

தவறு செய்தாலும் திருத்துவதற்கு தேவையான அளவு முடி இருந்தால் பிரச்சனையே இல்லை.

முதல் முறையாக வெட்டும்போது பார்லர்களில் செய்வது போல் கூந்தலை ஈரமாக்க வேண்டாம். சிக்குகளை நீக்கி விட்டு, காதுகளுக்கு மேலிருந்து ஹேர் கட் ஆரம்பிக்கவும்.

இரண்டு விரல்களுக்கு இடையே வெட்டப்போகும் முடியை இழுத்து பிடித்துக் கொள்ளவும். விரல்களுக்கு அடுத்தப் பக்கத்தில் இருக்கும் முடியின் அளவு தான் வெட்ட வேண்டிய அளவு.

கத்தரிக்கோலால் விரல்களை ஒட்டியது போல் முடியை வெட்டவும். இந்த காது அறுகில் தொடங்கியதை அடுத்த காது வரை சிறிது சிறிதாக முடியை எடுத்து ஒரே அளவில் வெட்டவும்.

ஒவ்வொரு முறை வெட்டிய பிறகும் கண்ணாடியில் பார்க்க மறக்க வேண்டாம். துல்லியமாக அளந்து தான் வெட்ட வேண்டும் என்று இல்லை. சீவியப்பிறகு கூந்தல் சீராக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம்.

Share this Story:

Follow Webdunia tamil