சிலருக்கு நெற்றியில் வேர்க்குரு போன்று பொரி பொரியாக வரும். அதைப் பற்றி அதிகமாக கவலைப் படுவார்கள்.
ஆனால் அதற்கு காரணமே நாம் தான். நாம் சில விஷயங்களைக் கவனமாக செய்து வந்தால் நெற்றி மிருதுவாக மாறிவிடும்.
இதற்கு முதலில் என்ன காரணம் என்று சொல்ல வேண்டும்.
பொதுவாக தலையில் பொடுகு இருப்பவர்களுக்கு அல்லது தலை சுத்தமாக இல்லாமல் இருப்பவர்களுக்கு நெற்றியில் இப்படி வரும்.
தலையில் இருக்கும் பொடுகு துகள்கள் நெற்றியில் விழுந்து அங்கேயே தங்கிவிடும். அந்த இடங்களில் எல்லாம் இப்படி பொரிப்பொரியாக வரும்.
சிலருக்கு முகப்பரு போன்று கன்னத்திலும் பொரிப்பொரியாக வந்திருக்கும். இவையும் தலையின் காரணமாக வந்தவைகள்தான்.
நெற்றியில் பொரிப்பொரியாக வருவதற்கு எந்த மருந்துமே வேண்டாம்.
எளிதான வழிகளை செய்து வந்தாலே சிறிது நாளில் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு ஈரத் துணியாலோ அல்லது தண்ணீரலோ நெற்றியைக் கழுவிவிட்டுக் கொண்டிருங்கள்.
இதை செய்தாலே போதும் நல்ல தீர்வு கிடைக்கும்.
ஒரு வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளியுங்கள்.
தலை முடியை டைட்டாக கிளிப் போட்டு விடாதீர்கள்.
சீப்பை சுத்தமாக வைத்திருங்கள். நெற்றியில் சீப்பு படாமல் தலை வாருங்கள்.
அவ்வப்போது குளிர்ந்த நீரால் முகத்தை கழுவுங்கள்.
ஒரே வாரத்தில் உங்கள் நெற்றியா என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.