ஆடைகளில் பல வகைகள் உண்டு. ஒவ்வொருவரும், தாங்கள் உடல் எடை, உயரம் போன்றவற்றிற்கு தகுந்த ஆடைகளை தேர்ந்தெடுத்து, நாம் செல்லும் இடத்திற்கு ஏற்றவாறு அணி வேண்டும்.
மாநிறம் கொண்ட பெண்கள் மரூன், சிவப்பு மற்றும் நீலம் போன்ற நிறங்களைக் கொண்ட சல்வார் கமீஸ் அணிவது நல்லது.
சல்வார் கமீஸ் ரெடிமேட் வாங்குவதை விட உங்கள் அளவிற்கேற்ப தைப்பது தான் சிறந்தது.
கமீஸின் நீளத்தைக் குறைவாகவே வைப்பதால் நீங்கள் உயரமாகக் காட்சியளிப்பீர்கள். உங்கள் தோள் அகலமாக இருந்தால் பஃப் கை கொண்ட கமீஸை அணியாதீர்கள்.
உங்கள் கைகள் தடித்து இருந்தால் கை வைக்காத கமீஸை அணிய வேண்டாம். குறைந்தது ஐந்து இஞ்ச் நீளம் கொண்ட கையுடன் கூடிய கமீஸை அணிவதால் உங்கள் கைகள் மெலிந்து தோற்றம் அளிக்கும்.
நீங்கள் மெல்லிய உடல் வாகு கொண்டவராக இருந்தால் சைனீஸ் காலர் கொண்ட கமீஸ் அணிவது நல்லது. அதனால் உங்கள் உயரம் கூடுதலாகத் தெரியும். ஆனால் உங்கள் எடை அதிகமாக இருந்தால் இவ்வாறான கமீஸ்களை அணிய வேண்டாம்.