Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்க்கரை நோயாளிகள் தேங்காய் சேர்த்த உணவுகள் சாப்பிடலாமா?

Mahendran
சனி, 27 ஜூலை 2024 (18:59 IST)
பொதுவாக சர்க்கரை நோயாளிகள் சில உணவுகளை சாப்பிடக்கூடாது என்றும் ஒரு சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்படுவதுண்டு. ஆனால் சில உணவுகளை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா வேண்டாமா என்பது குறித்த சந்தேகம் இருக்கும். அந்த வகையில் சர்க்கரை நோயாளிகள் தேங்காய் சாப்பிடலாமா என்பது குறித்து தற்போது பார்ப்போம்

தேங்காயில் பி1, சி, மாங்கனிஸ், பொட்டாசியம், காப்பர், இரும்பு ,பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் உள்ளன. மேலும் இதில் லாரிக் அமிலம் உள்ளிட்ட கொழுப்பு அமிலங்களும் உள்ளன, தேங்காயில் உள்ள லாரிக் அமிலம் உடலில் உள்ள தொற்றுக்களை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அழிக்கும் திறன் கொண்டது/

சர்க்கரை நோயாளிகள் உணவுகளில் தேங்காய் கலந்து சாப்பிடுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் அதே நேரத்தில் தேங்காய் பால் வடிவில் சாப்பிடுவது தான் பிரச்சனையை ஏற்படுத்தும்.

எனவே சர்க்கரை நோயாளிகள் தேங்காய் பால் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தேங்காயை துருவி காய்கறி போன்ற பொரியலில் போட்டு அதை சாப்பிடலாம். அதில் எந்தவித பிரச்சனையும் இருக்காது.

Edited by Mahendran
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments