Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொடுகை தொல்லையில் இருந்து நீங்க இதோ வழிகள்!

Advertiesment
பொடுகை தொல்லையில் இருந்து  நீங்க இதோ வழிகள்!
, வியாழன், 22 ஜூலை 2021 (00:18 IST)
கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக அரிப்பு ஏற்படும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட இயற்கையான வழிகளை தெரிந்துகொள்வோம்.
 
வெந்தயம்
 
Ads by 
வெந்தயத்தை தலைக்குதேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும். மிளகுதூளுடன் பால்  சேர்த்து தலையில்தேய்த்து சில நிமிடங்கள் ஊறியபின் குளித்தால், "பொடுகு தொல்லை நீங்கும்". தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகுபிரச்னை நீங்கும்.
 
பாசிப்பயறு
 
பாசிப்பயிறு மாவு மற்றும் தயிர் கலந்து தலையில் ஊறவைத்து பின்னர் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
 
கற்றாழை
 
கற்றாழை சாற்றை தலையில் மேல் தோலில்தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.
 
வேப்பிலை
 
வேப்பிலை கொழுந்து துளசி ஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளித்தால்  பொடுகுதொல்லை நீங்கும். துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம்  ஊறவைத்து கழித்து குளித்தால் பொடுகு பிரச்சனை நீங்கும்.
 
மருதாணி
 
வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகுதொல்லை நீங்கும். நெல்லிக்காய் தூள், வெந்தயப்பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து,  சிறிதுநேரம் கழித்து குளிக்கவேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர பொடுகு நீங்கும்.
 
தேங்காய் பால்
 
தேங்காயை அரைத்து பால் எடுத்து அதை தலையில் நன்றாக தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை  அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தல் பள பளக்கும்.
 
முட்டை
 
முதல்நாள் சாதம்வடித்த தண்ணீரை எடுத்துவைத்து, மறுநாள் அதை எடுத்து வைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். முட்டை வெள்ளைக் கரு, தயிர், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகுமறையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வைட்டமின்-சியை விட இரு மடங்கு சக்தியுள்ளதா திராட்சை விதைகள்?