Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவரா அரிசி சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மையா?

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2023 (18:24 IST)
பொதுவாக அரிசி சாதம் அதிகம் சாப்பிடக் கூடாது என்றும் அரிசி சாதம் சாப்பிடுவதால் தான் சர்க்கரை நோய் வருகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் நவரா அரிசி என்பது உணவாக மட்டுமின்றி மருந்தாகவும் இருப்பதால் இந்த அரிசியை தாராளமாக சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது.

நவரா அரிசி உடலுக்கு ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்து கொடுக்கும் என்றும் நோயாளிகளுக்கு சிறந்த உணவாக அமையும் என்றும் ரத்தம் எலும்புகள் தசைகள் ஆகியவை வலு சேர்க்க கூடிய திறன் இந்த நவரா அரிசிக்கு உண்டு என்றும் கூறப்படுகிறது.

பலவீனமாக இருப்பவர்கள், ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ளவர்கள், நவரா அரிசியை தொடர்ந்து சாப்பிடலாம் என்றும் இந்த அரிசியை சாப்பிட்டால் சர்க்கரை நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள்  நலம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த அரிசி பசியை தூண்டும் ஆற்றல் உள்ளது என்றும் ஆயுர்வேதத்தில் மூட்டு வலி, வாத நோய், பக்கவாதம் நோய்க்கு இந்த அரிசியை தான் சாப்பிட பரிந்துரை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நவரா அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இந்த அரிசியை அளவாக எடுத்துக் கொள்வது நல்லது. அரிசியுடன் தண்ணீர் அல்லது பால் சேர்த்து சமைத்து கஞ்சி ஆக சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தைகளுக்கு அவசியம் கொடுக்க வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள் என்னென்ன?

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் அத்திப்பழம்.. இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும்..!

வறண்ட சருமம் பிரச்சனைக்கு என்னென்ன உணவுகள்? இதோ ஒரு பட்டியல்..!

இந்த 5 வகை மீன் சாப்பிட்டால் மாரடைப்பு நோய் வராதாம்..!

ஆபத்தான நிலையை எட்டும் உடல் பருமன்.. இந்தியாவில் 45 கோடி பேர்! - அதிர்ச்சி ரிப்போர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments