கற்பூரவல்லி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இச்செடியின் மருத்துவ நன்மைகளை தெரிந்துக்கொள்ளுங்கள்...
கற்பூரவல்லி இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க சீதள இருமல் தீரும். கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.
கற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும். சூட்டைத் தணிக்கும்.
கற்பூரவல்லி இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல், சளிக் காச்சல் போகும்.
கற்பூரவல்லி இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்.
வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.
கற்பூரவல்லி இலையை பறித்து கழுவி உணவு உண்பதற்கு முன் கடித்து மென்று சாப்பிட்டால் உணவு ஜீரணம் நன்றாக ஆகும்.