Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மன அழுத்தத்தால் ஏற்படும் மாரடைப்பை தவிர்ப்பது எப்படி?

Advertiesment
Chest Irritation
, வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (09:04 IST)
மன அழுத்தம் மனிதருக்கு பல உடல் நல பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கிறது. முக்கியமாக இதய நோய்கள். பணிச்சுமை உள்ளிட்ட பல காரணங்களால் பலரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இதிலிருந்து மீண்டு மாரடைப்பை தவிர்த்து கொள்வது எப்படி என காண்போம்.

  • கடன் பிரச்சினைகள், பணி சுமை, தனிமை உள்ளிட்ட பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது.
  • மன அழுத்தம் காரணமாக ரத்த அழுத்தம், இதய பாதிப்புகள் ஏற்பட்டு மாரடைப்புக்கு வழி செய்கிறது.
  • தினசரி காலை அமைதியான சூழலில் அமர்ந்து தியானம் செய்வது அன்றைய நாளை அமைதியாக கையாள உதவும்.
  • பதட்டமான சமயங்களில் மூச்சை மெல்ல இழுத்து விட்டு மூச்சு பயிற்சி செய்வது பதட்டத்தையும், மன அழுத்தத்தையும் குறைக்க உதவும்.
  • தனிமை காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் நபர்கள் குழுவாக விளையாடும் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுவது நல்லது.
  • மன அழுத்தம் ஏற்படுத்தும் பணிகள், ஃபோன், கணினி பயன்பாட்டிற்கு வாரத்தில் ஒரு நாளாவது விடுப்பு அளிப்பது நல்லது.
  • ஒவ்வொரு நாளும் எளிதான வேலைகள் முதல் கடினமான வேலைகள் வரை பட்டியலிட்டு அதை செய்து வருதல் நலம்.
  • மன அழுத்தத்தை குறைக்க நமக்கு நாமே முக்கியத்துவம் அளித்தல் அவசியம். நமது உடல், மன நலனை என்றும் மனதில் கொள்ள வேண்டும்.
மன அழுத்தம் தொடர்பான சந்தேகங்கள், விளக்கங்களுக்கு மருத்துவ நிபுணர்களை தொடர்பு கொள்ளுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எலும்புகள் வலுவாக இருக்க இதையெல்லாம் செய்ய வேண்டும்..!