வெங்காயம் போலவே வெங்காயத்தாளிலும் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. அவற்றின் நன்மைகள் பற்றிய தொகுப்பு இதோ...
-
நீண்ட காலமாக வெங்காயத்தாள் சீன பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இளந்தளிர் வெங்காயத்தாளில் குறைந்த கலோரி இருக்கின்றன.
-
வெங்காயத்தாளில் வைட்டமின் சி, வைட்டமின் பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன.
-
வெங்காயத்தாள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி, புற்றுநோயை குணப்படுத்தும்.
-
வெங்காயத்தாளின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால், செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் கூட வழங்குகிறது.
-
வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட், பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
-
வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது.
-
வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கின்றது.
-
வெங்காயத்தாள் இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் மற்றும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
-
வெங்காயத்தாளில் உள்ள குரோமியம் சத்து நீரிழிவு நோய்க்கான சுகாதார நலன்களை வழங்குகிறது.
-
வெங்காயத்தாளில் இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் ஊட்டச்சத்து தன்மையை அதிகரிக்கிறது.
-
வெங்காயத்தாளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால், ஜலதோஷம் மற்றும் காய்ச்சலை எதிர்த்து போராட உதவுகிறது.