Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆலிவ் ஆயில் - இத்தனை நன்மைகளா... தெரிஞ்சிக்கோங்க...

Webdunia
சனி, 28 ஏப்ரல் 2018 (12:43 IST)
ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்காவில் முதலில் பயன்படுத்தப்பட்டு வந்த ஆலிவ் ஆயில் தற்போது உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆலிவ் ஆயிலில் என்ன நன்மை இருக்கிறது? பார்ப்போம்...
 
# ஆலிவ் ஆயிலில் நன்மை தரும் கொழுப்பு உள்ளது. இது உடலின் கெட்ட கொழுப்புகளை குறைத்து, இரத்த சர்க்கரை அளவை, இயல்பாக்குகிறது. 
 
# ஆலிவ் ஆயிலை சமையலில் பயன்படுத்துவதன் மூலம், குறிப்பாக டைப் 2 டயாபடீஸைக் குறைக்க முடியும். 
 
# வயது முதிர்வால் பக்கவாத பாதிப்பு ஏற்பட்டால், அதை தடுக்கும் ஆற்றல் ஆலிவ் ஆயிலுக்கு உண்டு. 
 
# இதில் உள்ள நல்ல கொழுப்பு, லிபோபுரோடினை குறைத்து, இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை தடுக்கிறது. 
 
# தினமும் ஆலிவ் ஆயிலை பயன்படுத்தினால், சரும கேன்சர், மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், உணவுக்குழாய் கேன்சர் போன்றவற்றை தடுக்கலாம். 
 
# மேலும், இதில் உள்ள வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள், உடலிலுள்ள தனித்த செல்கள், DNA மூலக்கூறுகளை தாக்குவதை தடுக்கிறது.
# ஆலிவ் ஆயிலில் உள்ள ஒலேயுரோபின் எலும்பை வலுவாக்கும் செல்களின் உற்பத்தியை ஊக்குவித்து, கால்சியத்தை எலும்புகளில் சேர்க்கும். 
 
# ஆலிவ் ஆயிலில் மசாஜ் செய்ய, நரம்புகளை இயல்பாக்குகிறது. இதனால், இரத்த ஓட்டம் சீராகி, மன அழுத்தம் குறைகிறது.
 
# தினமும் ஆலிவ் ஆயிள் பயன்படுத்துவது, அல்சைமர் நோய் எனப்படும் ஞாபக மறதியை குணமாக்குவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
# சாப்பிடும் முன் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயிலை குடித்தால், பசியை குறைத்து, உடல் எடையை குறைக்கும். 
 
# ஆலிவ் ஆயிலிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட் குணமாக்கி, சரும செல்களை பொலிவாக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றும். 
 
# தலையில் ஆலிவ் ஆயிலை தேய்த்துவர முடி உதிர்தல் குறையும், பொடுகைக் கட்டுப்படுத்தும். அதோடு, முடியை பளபளப்பாக்கி, அதன் வளர்ச்சியை தூண்டும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

HMPV தொற்று கர்ப்பிணிகளை பாதிக்குமா?

கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா? முக்கிய தகவல்..!

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது? மருத்துவ காரணங்கள்..!

எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments