Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓட்கா குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

ஓட்கா குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
, செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (17:49 IST)
மது வகைகளில் பல இருந்தாலும் ஓட்கா அனவைராலும் விரும்பி குடிக்கக்கூடிய மதுபானம். குறிப்பாக பெண்கள் அதிகம் விரும்பி குடிக்கும் மதுபானம் ஓட்கா. 

 
ரஷ்ய மொழியில் ஓட்கா என்றால் தூய்மையான தண்ணீர் என்று பொருள். ஓட்கா கம்பு, கோதுமை, உருளை, மரவள்ளிக்கிழங்கு மற்றும் கரும்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது. உலகிலேயே மிகவும் சுத்தமான ஆல்கஹாலாக திகழ்கிறது ஓட்கா.
 
ஓட்கா ஆரம்பத்தில் மருத்துவத்துக்கே அதிகம் பயன்படுத்தப்பட்டது. ஓட்காவில் 38% - 40% வரை ஆல்கஹால் இருப்பதால், அதிகமாக குடித்தால் போதையாகிவிடும். குறைவாக குடித்தால், உடலுக்கு நன்மை தரும். 
 
பல்வலி வந்தால் பஞ்சில் சிறிது ஓட்காவை நனைத்து பல் ஈறுகளில் வைத்து வர பல்வலி உடனே மறையும். வாய் துர்நாற்றம் போக்கும் மவுத்வாஷ். 
 
ஓட்காவை நீரில் கலந்து அதனுடன் சிறிது இலவங்கப்பட்டைத்தூள் சேர்த்து, ஒருவாரம் ஊறவைக்க வேண்டும். பின் அந்த நீரை வடிகட்டி சேகரித்து வைத்துக்கொண்டு, தினமும் காலையில் வாயிலிட்டு கொப்புளித்துவரலாம், வாய்க்கிருமிகளை அகற்றி, நாற்றத்தை ஒழித்துவிடும்.
 
ஓட்கா முகத்தில் உள்ள அழுக்கை நீக்கி, முக தசைகளை சுருக்கி, முகத்தை மிருதுவாக்கும். ஆறவைத்த க்ரீன் டீத்தூள் நீரில், சிறிது ஒட்காவை கலந்து, பஞ்சை கொண்டு, முகத்தில் மென்மையாகத் தடவிவர, விரைவில் முகம் மலர்ந்து பொலிவாகும். 
 
ஓட்காவை குறைவாக எடுத்துக்கொண்டால், இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தநாள அடைப்புகள், சுருக்கத்தை நீக்கி, இதயத்தை வலுவாக்கும். உடலில் நல்ல கொழுப்புகளை உண்டாக்கி, நச்சு கொழுப்புகளை கரைப்பதால், உடல் எடைக்குறைப்பில், ஓட்கா முக்கிய பங்கு வகிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...!