Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்க்கரை நோயைப் போக்கும் துளசி இலைகள்-ஆய்வு

Advertiesment
சர்க்கரை நோய்
, செவ்வாய், 27 செப்டம்பர் 2011 (13:27 IST)
துளசி இலையில் உள்ள முக்கியமான சத்து ஒன்று சர்க்கரை நோயைக் குணப்படுத்துவதாக ஆந்திர மாநில குண்டூர் மாவட்டத்தில் உள்ள விக்னன் பல்கலை மாணவர்கள் குழு ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர்.

துளசி இலையில் உள்ள 'ஆசிமம் சாங்டம்' (Ocimum sanctum) என்ற சத்து சர்க்கரை நோயைக் குணப்படுத்தவல்லது என்பதை ஆய்வு பூர்வமாக நிரூபித்துள்ளனர்.

சர்க்கரை நோயால் இந்திஆவில் சுமார் 4 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர். சர்க்கரை நோய் அதன் உச்சத்தில் இருதயம், கண்கள், கிட்னி, நரம்புகள் மற்றும் பாதம் ஆகியவற்றில் மோசமான விளைவுகளை ஏற்பத்தக்கூடியவை.

விக்னன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜி. முரளிகிருஷ்ணன் தலைமையிலான இந்த ஆய்வுக்குழுவினர் துளசி இலையின் சில அபூர்வ சக்திகளைக் கண்டு பிடித்துள்ளனர்.

துளசி இலை ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவைக் குறைக்கவல்லது என்று இந்த ஆய்வாளர்கள் ஆய்வு பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளனர்.

ஆய்வில் எலிகளைப் பயன்படுத்திய இந்த ஆய்வுக்குழு முதலில் 'ஸ்ட்ரெப்டோசோசின்' என்ற ரசாயனத்தைப் பயன்படுத்தி எலிகளுக்கு சர்ர்க்கரையின் அளவை அதிகரித்தனர். பிறகு துளசி இலையின் இவர்கள் கண்டுபிடித்த இந்த முக்கியமான மருந்தை நாளொன்றுக்கு ஒரு முறை 30 நாட்களுக்கு கொடுத்து வந்தனர்.

இந்த ஆய்வின் முடிவில் சர்க்கரையின் அளவு குறக்கப்பட்டதிருந்ததோடு, முக்கிய உடலுறுப்புகளான கிட்னிக்கள், மற்றும் லிவர் ஆகியவை இந்த துளசி மருந்தால் பாதுகாக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

துளசி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியப் புராணங்களில் பத்ம புராணம் துளசியின் பலன்கள் பற்றி நிறைய பேசியுள்ளது.

ஆயுர்வேத சிகிச்சையில் துளசி பல்வேறு நோய்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. துளசியில் உள்ள யூஜினால் என்ற எண்ணெய் சத்து அழற்சியிலிருந்து பாதுகாக்கிறது. மூச்சுக் குழல் தொடர்பான நோய்களுக்கு துளசி இலையின் பலன்கள் ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதில் உள்ள 'அர்சாலிக்' அமிலம் ஒவ்வாமை நோயைத் தீர்க்க பயன்படுகிறது.

அலர்ஜி, மற்றும் ஆஸ்த்மா, உடல் நோய் தடுப்புச் சக்திகளில் துளசி இலைகள் முக்கியப் பங்காற்றுவதும் ஏற்கனவே அறியப்பட்டவைதான்.

Share this Story:

Follow Webdunia tamil