Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கழுத்தை இறுக்கும் நோய்

டாக்டர் ஆர். குமரேசன்

Advertiesment
மருத்துவம்
, புதன், 2 மே 2012 (13:55 IST)
FILE
நீங்கள் வாகனம் ஓட்டுபவரா, அடிக்கடி டி.வி. முன் அமர்ந்து இருப்பவரா? நாற்காலியில் அமர்ந்து அதிக நேரம் வேலை செய்யக் கூடியவரா? அடிக்கடி `கவலை'கள் உங்களை வாட்டும்படி வைத்துக் கொள்பவரா? இதற்கெல்லாம் நீங்கள் ஆம் என்றால் இந்தக் கட்டுரையை அவசியம் படிக்க வேண்டும்! இப்போது அதிகமாகப் பரவி வரும் நோய். குறிப்பாக 40 வயதுக்கு மேல் பரவலாகக் காணப்படும் நோய் `கழுத்து இறுக்கம்' எனப்படும். "செர்விகல் ஸ்பாண்டிலைட்டிஸ்!"

நம் கழுத்து வலிக்கத் தொடங்கும்வரை நாம் கழுத்துப் பற்றி நினைத்துப் பார்ப்பதே இல்லை. அது ஏதோ சங்கிலிகளையும், நெக்லஸ்களையும், மலர்மாலைகளையும் ஏந்துகிற ஒரு ஸ்டாண்ட் என்றே மதிக்கிறோம்.

ஆனால், கழுத்துத் தான் தலையைத் தாங்குகிற முக்கிய உறுப்பு. ஐம்பொறிகளில் மூக்கு, வாய், கண், காது என்ற முக்கியமான நான்கு பொறிகள் செயல்பட உதவும் பீடம.

தலை, செர்விகல் வெர்டிப்ரே எனப்படும் ஏழு சிறிய எலும்புகளாலும், 332 சிக்கலான தசைகளாலும் பாதுகாக்கப்பட்டுள்ளது.

தண்டுவடத்தில் இருந்து 8 நரம்புகள் வெளிப்பட்டு அசைவுகள், உணர்வுகள் என தலை, தோள்கள், மார்பு, கைகள் ஆகிய உறுப்புகளுக்கு செய்திகளை அனுப்புகின்றன.

கழுத்தெலும்புகளுடனும் அவற்றின் இடையிலும் நாரிழைகளாக குருத்தெலும்புகளின் பட்டைகள் உள்ளன. அவற்றை டிஸ்குகள் என்று அழைக்கின்றனர்.

அவை குஷன்களைப் போலவும் ஷாக் அப்ஸார்பர்களைப் போலவும் பணியாற்றுகின்றன. இந்த டிஸ்குகள் தேய்வடைந்து போவதுண்டு, அப்போது குறுகிவிடும். நெகிழ்வுத்தன்மை குன்றி தம் நீர்ப் பொருளை இழக்கின்றன. அப்போது டிஸ்கு சீர்குலைவு மாற்றங்களும் ஆளாகிறது.

படிப்படியாக கழுத்தெலும்புகள் நெருக்கமுற வைத்து ஒன்றையொன்று தொடுகின்றன. இதனால் ஏற்படும் எரிச்சல் உணர்வு எலும்புச் சிதார்களை உருவாக்கி தசையமைப்பை ஊடுருவும். அப்போது வெளிவரும் ஓர் எலும்புச் சிதார் ஒரு நரம்பினைக் குத்தத் தொடங்கும்.

மூட்டுக்களைச் சுற்றியுள்ள திசு வீங்கும். பின்பு கழுத்து நரம்புகள் எலும்புக் கட்டமைப்புக்குள் நசுக்கத் தொடங்கும். இதுதான் எலக்ட்ரிக் ஷாக் போன்ற வலியை ஏற்படுத்துகின்ற செர்விகல் ஸ்பாண்டிலோஸிஸ் என்ற சீர்கேடு ஆகும்.

எப்போது பிரச்னை வரும்?

இந்த கழுத்து இறுக்கக் கோளாறு மிகவும் சிறிய வயதில் கூடத் தோன்றலாம். படிப்படியாக முற்றி 40 முதல் 50 வயதுக் காலத்தில் இது வெளியே தெரியும். 50 வயதுக்கு மேற்பட்ட ஏறக்குறைய ஒவ்வொருவரிடமும் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால் இந்தக் கோளாறு சிறிதேனும் இருப்பது புலப்படும்.

காரணங்கள்:

தலைமுடி நரைக்கிறது. தோல் சுருங்குகிறது. அவ்வாறே கழுத்தெலும்பும் வயதாக ஆக மாற்றங்களுக்கு ஆளாகிறது.

தவறான முறையில் அமர்தல், தலையை வளைத்தல், வயது மூப்பு, பலவீனமான வயிற்றுத் தசைகள், நெடுநேரம் நாற்காலியிலேயே உட்காரும் பணி ஆகிய காரணங்களால் முதுகின் மேற்புறப் பகுதி மேலும் பின்னால் வளைகிறது. பின்னோக்கிய வளைவில் இருந்து ஈடுகட்ட கழுத்தை அது முன்னோக்கி வளைய வைக்கிறது.

தட்டச்சு, கம்ப்யூட்டர் இயக்கம், மேசைப் பணி, நிர்வாகப் பணி ஆகியவை ஏராளமான அளவு குனிய வைக்கிறது. அதனால் தோள்கள் முன் சாய்ந்து, கழுத்து முன் நோக்கி குனிகிறது.

கழுத்து இறுக்கம்...!
நரம்புகளின் இறுக்கம் ஆனது கிள்ளுவது போன்றும், குண்டூசிகளால் குத்துவது போன்றும், மாறி கைகள் மரத்துப் போகலாம்.
webdunia
கழுத்து தன் நிலை மையத்தைவிட்டு சிறிதளவேனும் முன்னோ பின்னோ நெடுநேரம் வளைந்தால் கழுத்துத் தசைகள் இறுகும் அல்லது சுருங்கும்.

அப்போதும் தசைக் களைப்பு ஏற்பட்டு கழுத்தில் ஒரு வலி தோன்றும். சில சமயங்களில் மிகவும் உயரமான தலையணையைப் பயன்படுத்தும்போதோ, தலை குப்புறப் படுக்கும்போதோ, பொருத்தமற்று படுக்கும் போதோ கழுத்து வளையம் பாதிப்புற்று வலி தோன்றத் தொடங்கும்.

இறுதியாகவும் ஆனால் உறுதியாகவும் கழுத்து இறுக்க வலி வர ஒரு காரணம் உண்டு. தொடர்ந்த கவலையினால் ஏற்படும் உணர்வு அழுத்தமே அது.

தன் வேலையைக் குறித்தோ, குடும்பத்தைக் குறித்தோ மிதமிஞ்சிய கவலை அல்லது தன் உணர்ச்சிகளை அடக்கி வைத்தல் ஆகிய போக்குகள், கழுத்துக் காயங்களை தீவிரப்படுத்தும்.

வெளிப்படும் விதம் :

முதலில் லேசான அசௌகரியம் தெரியும். போகப் போக கழுத்து விறைக்கும். வலி கடுமையாகும். செர்விகல் ஸ்பாண்டிலோஸிஸ் வரும்.

நரம்புகளின் இறுக்கம் ஆனது கிள்ளுவது போன்றும், குண்டூசிகளால் குத்துவது போன்றும், மாறி கைகள் மரத்துப் போகலாம்.

இந்த அறிகுறிகள் உடலில் ஒரு பக்கத்தில் ஏதேனும் ஒரு சமயத்தில் ஏற்படும். அபூர்வமாக, கைப் பிடியானது பலவீனம் ஆவதும் உண்டு. செர்விகல் ஸ்பாண்டிலோஸிஸ் கழுத்தில் ஏற்பட்டு அதன் அழுத்தம் வலியாகிறது. வலி தசை வீக்கத்தை ஏற்படுத்துகிறது. தசை வீக்கம் அழுத்தத்தையும் வலியையும் மேலும் அதிகரிக்கிறது.

இந்த சீர்கேட்டால் கழுத்து எலும்புகள் வழியே மூளைக்குச் செல்லும் ரத்தம் இறுக்கம் பெறுகிறது. இதன் விளைவாக தலைவலி, மயக்க உணர்வு, நிலையற்ற உணர்வு, இரட்டை பிம்பப் பார்வை ஆகியவை கழுத்தை வளைக்கும்போது ஏற்படும்.

சிகிச்சை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டால், தண்டு வடம் பாதிக்கப்படும். மிகவும் கடுமையானதும் மாற்றவே முடியாததுமான பாதிப்புகளும் ஏற்படலாம். படிப்படியாகக் கால்கள் பலவீனமுறலாம். அல்லது சிறுநீரகக் கோளாறுகளும் ஏற்படலாம்.

Share this Story:

Follow Webdunia tamil