Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈறுகளையு‌ம் ச‌ரியாக கவ‌னியு‌ங்க‌ள்

Advertiesment
ஈறுகளையும் சரியாக கவனியுங்கள்
, திங்கள், 2 நவம்பர் 2009 (11:51 IST)
வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்படு‌ம் பல ‌பிர‌‌ச்‌சினைகளு‌க்கு வா‌யி‌ல் அ‌றிகு‌றி‌த் தெ‌ரியு‌ம். அதுபோ‌ல் வா‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைகளா‌ல் வா‌யி‌ற்‌றி‌ல் உ‌ள்ள உட‌ல் உறு‌ப்பு‌க‌ள் பா‌தி‌க்க‌ப்படு‌ம்.

webdunia photo
WD
40 வயதை‌க் கட‌ந்தவ‌ர்க‌ள் உட‌ல் ப‌ரிசோதனை செ‌ய்வது‌ம், உட‌ற்ப‌யி‌ற்‌சி செ‌ய்வது‌ம், நடை‌ப்ப‌‌யி‌‌ற்‌சி செ‌ய்வது‌ம் என த‌ங்களது உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ன் ‌மீது கவன‌ம் செலு‌த்து‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல், பலரு‌ம் ப‌ற்களையும‌், ஈறுகளையு‌ம் கவ‌னி‌க்க மற‌ந்து‌விடு‌கி‌ன்றன‌ர்.

ப‌‌ல்‌லிலோ அ‌ல்லது ஈறு‌க‌ளிலோ ஏதேனு‌ம் ‌பிர‌ச்‌சினை வ‌ந்த ‌பிறகுதா‌ன் மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ல்‌கிறா‌ர்க‌ள். இது ‌மிகவு‌ம் தவறு.
ஒரு க‌ர்‌ப்‌பி‌ணி‌ப் பெ‌ண் முத‌லி‌ல் மரு‌த்துவமனை‌க்கு‌ச் செ‌ன்றது‌ம் அவளது வா‌ய்‌‌க்கு‌த்தா‌ன் ‌‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது. அதாவது, அவளது வா‌யி‌ல் ஏதேனு‌ம் தொ‌ற்று உ‌ள்ளதா? சொ‌த்தை‌ப் ப‌ற்க‌ள் உ‌ள்ளனவா? என ப‌ரிசோ‌தி‌த்து அத‌ற்கே‌ற்ற ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது. இது ஏ‌ன் எ‌ன்று பலரு‌ம் அ‌றிவத‌ி‌ல்லை. அதாவது, வா‌யி‌ல் இரு‌ந்து ஏதேனு‌ம் ‌கிரு‌மி ‌வ‌யி‌ற்று‌க்கு‌ள் செ‌ன்று கருவை‌ பா‌தி‌க்க‌க் கூடாது எ‌ன்பதுதா‌ன் இத‌ன் அடி‌ப்படையாகு‌ம்.

பெரு‌ம்பாலானவ‌ர்க‌ள் பல் பிடுங்குவதற்கு மட்டு‌ம்தா‌ன் பல் மருத்துவம் எனக் கருது‌கி‌ன்றன‌ர். எ‌ந்த ‌பிர‌ச்‌சினையாக இரு‌ந்தாலு‌ம் ப‌ல் மரு‌‌த்துவ‌ரிட‌ம் செ‌ன்றா‌ல் ப‌ல்லை‌ப் ‌பிடு‌ங்‌கி‌விடுவா‌ர் எ‌ன்று ‌நினை‌ப்பா‌ர்க‌ள். உ‌ண்மை‌யி‌ல் பற்கள், ஈறுகளை முறையாகப் பராமரித்து பற்களை கடைசி வரை தக்க வைத்துக் கொள்ள உதவுவதுதான் பல் மருத்துவம் எ‌ன்பதாகும‌்.
ரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவை குறித்து மக்கள் அதிகம் கவலைப்படுவத‌ற்கு‌க் காரண‌ம் இ‌ந்த நோ‌ய்க‌ள் இதயத்தை பா‌தி‌க்கு‌ம் எ‌ன்பதா‌ல்.. ஆனா‌ல் இதே ஒரு ப‌ல்‌லி‌ல் ‌பிர‌ச்‌சினை, ஈறு ‌வீ‌க்க‌ம் போ‌ன்றவை ஏ‌ற்ப‌ட்டா‌ல்.. ப‌ல் தானே ‌பிறகு பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.. அ‌ல்லது தானாகவே ச‌ரியா‌கி‌விடு‌ம் எ‌ன்று ‌நினை‌ப்பவ‌ர்க‌ள் பல‌ர் உ‌ள்ளன‌ர்.

ஆனா‌ல் இ‌னி அ‌ப்படி ஒரு அல‌ட்‌சிய‌த்தை ‌நீ‌ங்க‌ள் செ‌ய்ய‌க் கூடாது. ஏனெ‌னி‌ல் ஈறு நோய்க்கும் இதய நோய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக மரு‌த்துவ ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அதாவது, ஈறு நோய்க்கும் இதய நோய்க்கு வித்திடும் ரத்த நாளங்களின் குறுகலுக்கும் ("அதீரோஸ்குளோரோசிஸ்') தொடர்பு இருப்பது நிரூபணமாகியுள்ளது.
ஈறு நோய் எ‌ன்பது, பற்களி‌ன் இடு‌க்குக‌ளி‌ல் த‌ங்கு‌ம் ‌சில உணவுப் பொருள்கள், சில வகை பாக்டீரியாக்களால் உருவாக்கப்படும் ஒரு வகை அசுத்த கொழுப்பு பற்களைச் சுற்றிப் படிகிறது. இதை ஆரம்பகட்ட ஈறு நோய் (ஜின்ஜிவிட்டிஸ்) என்று கூறலாம்.
வழக்கமாக பிங்க் நிறத்தில் இருக்கும் ஈறுகள், சிவப்பு நிறமாகக் காட்சி அளிப்பதும் பல் துலக்கும்போது ரத்தக் கசிவு ஏற்படுவதும் ஈறு நோய்க்கான அறிகுறிகள். இப்படி பற்களில் படியும் கடினமான கொழுப்புப் பொருள்களை பல் துலக்கும் பிரஷ் மூலம் அகற்ற முடியாது.
இந்தக் கொழுப்பு படிப்படியாக இறுகி, மஞ்சள் கலந்த கடின படிமமாக உருமாறும். நாள்கள் செல்லச் செல்ல, இந்தப் படிமம் ஆழமாக இறுகி, தீவிர ஈறு நோயாக மாறி விடும். இதன் மூலம் தாடை எலும்பில் நோய் பரவி பாதிப்பு ஏற்படும். மேலும் இது இதய நோயாகவும் உருவெடுக்கும்.
இதயத்துக்கு ரத்தத்தை அனுப்பும் ரத்த நாளங்கள் கொழுப்புச் சத்தால் அடைக்கப்பட்டு, குறுகிய பாதையாகச் சிதைவடைவதுதான் இதய நோயாக உருவெடுக்கிறது.
இவ்வாறு நாளங்களில் கொழுப்பு படியும்போது ரத்த நாளங்களின் சுவர்களும் பாதிக்கப்பட்டு, ஆக்ஸிஜன் மற்றும் சத்துப் பொருள்கள் பற்றாக்குறையால் இதயம் பாதிக்கப்படும். மாரடைப்பு ஏற்படக்கூடும். இப்படி கடுமையான பாதிப்பை தரக்கூடிய இதய நோய்க்கும் ஈறு நோய்க்கும் தொடர்பு இருக்கிறது என்ற அதிர்ச்சியான தகவல் பல ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது.
ஈறு நோயை உருவாக்கும் பாக்டீரியா, ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும். மேலும் எதிர்ப்புத் தன்மையற்ற ஈறுகளிலிருந்து வெளியாகும் பாக்டீரியாக்கள், ரத்தக் குழாயைச் சென்றடைந்து நாளங்களின் சுவர்களை வெப்பப்படுத்துவதால் நாளங்களில் தேவையற்ற சுருக்கம் ஏற்படுகிறது. சில நேரங்களில் கொழுப்புகள் அடங்கிய ரத்த நாளங்களில் பாக்டீரியாக்கள் தங்களை நேரடியாக இணைத்துக் கொள்வதாலும் ரத்த நாளங்களில் சுருக்கம் ஏற்படுவதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
எனவே இதய நோயைத் தவிர்க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று விரும்புவோர் ஈறு நோய்களை உடனடியாக உ‌ரிய மரு‌த்துவ‌‌த்‌தி‌ன் மூல‌ம் ‌தீ‌ர்‌த்து‌க் கொ‌ள்ள வேண்டும்.
ப‌ல் போனா‌ல் சொ‌ல்லே‌ப் போ‌ய்‌விடு‌ம். எனவே இ‌னியு‌ம் ப‌ல் தானே எ‌ன்று அல‌ட்‌சியமாக இரு‌க்க மா‌ட்டீ‌ர்களே..

Share this Story:

Follow Webdunia tamil