Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவை அழிக்க காத்திருக்கும் மிகப்பெரிய பூகம்பம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவை அழிக்க காத்திருக்கும் மிகப்பெரிய பூகம்பம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
, புதன், 13 ஜூலை 2016 (09:17 IST)
இந்தியா-வங்காளதேசத்திற்கு இடையே இதுவரை உலகில் ஏற்படாத பயங்கரமான பூகம்பம் ஏற்படும் ஆபாயம் உள்ளதாக நேச்சர் ஜியோ-சயின்ஸ் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.


 

 
உலகின் மிகப்பெரிய ஆற்றுப்படுக்கையின் கீழுள்ள 2 கண்ட தட்டுக்களில் அழுத்தம் அதிகரித்து வருவதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இந்தியா-வங்காளதேசத்திற்கு இடையே உள்ள பகுதியில், சப்டக்‌ஷன் மண்டலமாக இந்த புதிய பூகம்ப பகுதி அறியப்பட்டுள்ளது. இதுவரை கடலுக்கு அடியில் மட்டுமே, இந்த சப்டக்‌ஷன் மண்டலம் இருந்தன. அதனால் கடலில் மட்டுமே பெரிய அளவிலான பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் தற்போது அது  முற்றிலும் நிலத்துக்கு அடியில் முதன்முறையாக இருப்பதால் கட்டாயம் பெரிய சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனால் பூமி குலுங்குதல் மட்டுமல்ல நதிகளின் போக்கில் கூட மாற்றம் ஏற்படலாம். கண்டத்தட்டுகளுக்கு இடையே சுமார் 400 ஆண்டுகளாக அழுத்தம் சேர்ந்துள்ளது, இவ்விடத்தில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டதாக வரலாற்று சான்றுகள் கிடையாது. 
 
பூமிக்கு அடியில் 12 மைல்களுக்கு வெறும் சேறும் சகதியும் உள்ள பகுதி, அதுக்கு அடியில்தான் சப்டக்‌ஷன் மண்டலம் உள்ளது. ஆகவே இப்பகுதியில் பெரும் ஆபாயகரமான பூகம்பம் ஏற்பட்டால் சாலைகள், நதிகள், கட்டிடங்கள் அனைத்தும் பூமி அடியில் புதைந்து விடும். 
 
மேலும் மெக்சிகோ ஸ்டேட் பல்கலை கழக நிலநடுக்க ஆய்வாளர் ஜேம்ஸ், இந்த ஆய்வு சரியானதாக இருந்தால், அழுத்தம் கூடிவரும் பிளேட் பகுதியில் பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக, தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறையில் ராம்குமார் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்: வக்கீல் ராமராஜ் பேட்டி