சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.
இதற்கு ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் எதிர்ப்பு தெரிவித்தார். நேற்று புழல் சிறையில் ராம்குமாரை சந்தித்துவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராம்குமார் அப்பாவி என கூறினார்.
இந்த வழக்கில் ராம்குமாரை தேவையில்லாமல் சேர்த்து, அவரை குற்றவாளியாக்க காவல்துறை முயற்சிக்கின்றனர். ராம்குமார் புகைப்படம் அனைத்து ஊடகங்களிலும் வெளியான நிலையில், அடையாள அணிவகுப்பு நடத்துவது வேடிக்கையாக உள்ளது என்றார்.
மேலும், இந்த வழக்கில் தனக்கு துளி அளவு கூட சம்பந்தம் இல்லை என்று ராம்குமார் என்னிடம் தெரிவித்தார். அவர் மனநலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார், அதற்கான சிகிச்சை ராம்குமாருக்கு அளிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் கூறினார்.