ஐபோன்னுக்கே டஃப் கொடுக்கும் Mi நோட் 3!!

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (12:15 IST)
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி ஆப்பிள் நிறுவனத்திற்கே போட்டியாக மாறியுள்ளது. சியோமி மலிவு விலை மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதில் பிரபல நிறுவனமாக இருக்கிறது. 
 
டிஎக்சோமார்க் (DxOMark) எனும் பென்ச் மார்க்கிங் தளத்தில் தலைசிறந்த கேமரா வழங்கும் ஸ்மார்ட்போன்கள் அவை வழங்கும் புகைப்பட தரம் கொண்டு மதிப்பீடு செய்து வருகிறது. புகைப்படத்திற்கு ஏற்றவாறு ஸ்மார்ட்போனுக்கு புள்ளிகள் வழங்கப்படுகிறது. 
 
சமீபத்தில் வெளியாகியுள்ள புள்ளிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐபோன் 8, கூகுள் பிக்சல் மற்றும் எச்டிசி யு11 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை விட சியோமியின் Mi நோட் 3 கேமரா அதிக புள்ளிகளை பெற்றுள்ளது. 
 
Mi நோட் 3 கேமரா புகைப்படங்களை வழங்குவதில் 94 புள்ளிகளையும், வீடியோக்களில் 82 புள்ளிகளையும் பெற்றிருக்கிறது. ஒட்டுமொத்தமாக Mi நோட் 3 ஸ்மார்ட்போன் கேமரா 90 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
 
ஆப்பிள் ஐபோன் 8, கூகுள் பிக்சல் மற்றும் எச்டிசி யு11 போன்ற ஸ்மார்ட்போன்கள் முறையே 93, 90 மற்றும் 90 புள்ளிகளையே பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானக் கொள்கை ஊழல்!.. அரவிந்த் கெஜ்ரிவால் குற்றமற்றவர்!.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...

சுயேட்சையாக தேர்தலில் தோற்ற ஓபிஎஸ் திமுகவுக்கு உதவுவாரா?!. ஒரு அலசல்...

ரோஸி டீ கடை நடத்தி உங்களை!.. பன்னீர் செல்வத்தை பொளந்த அதிமுக ஐடி விங்...

தளபதி சீட் கொடுத்தால் திமுகவில் போட்டியிடுவேன்!.. ஓபிஎஸ் பேட்டி...

முதல்வர் ஸ்டாலின் 73வது பிறந்தநாள்.. கட்டாயம் இதை தவிர்க்க வேண்டும் என்று அன்புடன் வேண்டுகோள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments