Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடேய் அம்பானி... உனக்கென்னப்பா குறைச்சல்... புலம்பும் ஜியோ பயனர்கள்!

Webdunia
திங்கள், 2 டிசம்பர் 2019 (12:53 IST)
ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தியுள்ள நிலையில் ஜியோவும் 40% கட்டணத்தை உயர்த்தியுள்ளது. 
 
2016 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பிறகு ஏர்டெல், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் பலர் ஜியோவிற்கு தாவினர். இதனால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்தன.
 
அதன் பின்பு ஜியோவுக்கு நிகரான திட்டங்களை அமல்படுத்தி, தனது வாடிக்கையாளர்களை ஓரளவு திருப்திப்படுத்தியது. இந்நிலையில் நஷ்டத்தில் தொடர்ந்து இயங்கி வருவதாக கூறி வந்த ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள், சேவை கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளன.
ஆம், ஏர்டெல் நிறுவன சேவை கட்டணங்கள் 14% முதல் 40% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல வோடஃபோன் நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தி புதிய ரீசார்ஜ் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. 
 
இந்நிலையில் ஜியோ நிறுவனமும் வருகிற 6 ஆம் தேதி முதல் 40% கட்டணத்தை உயர்த்த உள்ளது. புதிய திட்டங்களுக்கான கட்டணம் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. 
 
நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் விலை உயர்த்துவதை ஏதோ ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும், அதிக லாபத்துடன் இயங்கி வரும் ஜியோ ஏன் விலை உயர்த்த வேண்டும் என ஜியோ வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments