Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விற்பனையில் அசத்தும் டாப் 10 கார்கள்

விற்பனையில் அசத்தும் டாப் 10 கார்கள்
, செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (10:58 IST)
பண்டிகை காலத்துக்கு துவக்கமாக அமைந்த கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கார் விற்பனை மிக சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்தது. கடந்த மாதத்தில் விற்பனை எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 10 இடங்களை பிடித்த டாப் 10 கார் மாடல்கள்.


 
 
10. மாருதி சியாஸ்: 
 
ஒட்டுமொத்த பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளது மாருதி சியாஸ். கடந்த மாதத்தில் 6,214 சியாஸ் கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட சியாஸ் கார் வந்த பிறகு, விற்பனையில் ஹோண்டா சிட்டியை வீழ்த்தி முன்னேறியிருக்கிறது சியாஸ். 
 
09. மாருதி செலிரியோ: 
 
கடந்த மாதத்தில் 8,063 மாருதி செலிரியோ கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. அடக்கமான வடிவம், போதிய சிறப்பு அம்சங்கள், ஏஎம்டி கியர்பாக்ஸ் வசதி, அதிக மைலேஜ் தரும் டீசல் எஞ்சின் என என பட்ஜெட் வாடிக்கையாளர்களின் ஃபர்ஸ்ட் சாய்ஸாக இருக்கிறது.
 
08. மாருதி பலேனோ: 
 
கடந்த மாதத்தில் 8,671 பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தோற்றம், இடவசதி, சிறப்பம்சங்கள், விலை என அனைத்திலும் மதிப்பு மிக்க காராக இருக்கிறது மாருதி பலேனோ.
 
07. ஹூண்டாய் எலைட் ஐ20: 
 
கடந்த மாதத்தில் 9,146 எலைட் ஐ20 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. ஏனெனில், அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே, கடும் போட்டிகளை எதிர்கொண்டு சிறப்பான விற்பனை பங்களிப்பை எலைட் ஐ20 கார் வழங்கி இருக்கிறது.
 
06. ரெனோ க்விட்: 
 
கடந்த மாதம் ரெனோ க்விட் கார் புதிய மைல்கல்லை தொட்டிருக்கிறது. ரெனோ க்விட் காரின் விற்பனை 10,000 என்ற புதிய எண்ணிக்கையை கடந்தது. கடந்த ஒரே மாதத்தில் 10,719 ரெனோ க்விட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 
 
05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10: 
 
விற்பனையில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு ஏமாற்றம் தராமல், மாதாமாதம் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் மாடல். கடந்த மாதத்தில் 12,957 கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. பட்ஜெட் செக்மென்ட்டில் பிரிமியம் அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.
 
04. மாருதி ஸ்விஃப்ட்: 
 
கடந்த மாதத்தில் 13,027 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. போரடிக்காத இதன் டிசைன் மூலமாக, ஹேட்ச்பேக் காரின் சூப்பர் ஸ்டார் மாடலாக தொடர்ந்து வலம் வருகிறது. மைலேஜ், விலை, பராமரிப்பு செலவு என அனைத்திலும் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குகிறது.
 
03. மாருதி வேகன் ஆர்: 
 
கடந்த மாதத்தில் 14,571 மாருதி வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. குறைவான விலையில் மிகவும் நம்பகமான மாடல். குறைந்த பராமரிப்பு செலவு, சிறிய இடத்திலேயே பார்க்கிங் செய்யும் வசதி, அதிக ஹெட்ரூம் இடவசதி போன்றவை இந்த காரின் மதிப்பை கூட்டும் விஷயங்கள்.
 
02. மாருதி டிசையர்: 
 
கடந்த மாதத்தில் 15,766 டிசையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. விற்பனை சற்று குறைவுதான் என்றாலும், இன்னமும் போட்டியாளர்கள் எட்ட முடியாத இடத்தில் மாருதி டிசையர் கார்கள் இருக்கிறது. குறைந்த பராமரிப்பு செலவு கொண்ட செடான் கார் என்பது இதன் முக்கிய அம்சம்.
 
01. மாருதி ஆல்ட்டோ க்விட்: 
 
கடந்த மாதத்தில் 20,919 ஆல்ட்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. குறைந்த பராமரிப்பு செலவு, மாருதியின் சர்வீஸ் மையங்களின் விரிவான சேவை போன்றவை இந்த காருக்கு பக்க பலமாக இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவியுடன் ரொமான்ஸ்! பாடகராக மாறிய பிரபல கிரிக்கெட் வீரர்!