3 நாட்களுக்கு பின் ஓப்பன் ஆன பங்குச்சந்தை.. 200 புள்ளிகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

Siva
திங்கள், 11 மார்ச் 2024 (10:15 IST)
கடந்த வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரி தினம் என்பதால் பங்குச்சந்தை விடுமுறை தினம் என்ற நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்களுக்கு பின் இன்று பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் 200 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 233 புள்ளிகள் சரிந்து 73,910 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 45 புள்ளிகள் சரிந்து 22,404 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

வாரத்தின் முதல் நாளே பங்குச் சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியாக இருந்தாலும் இனி வரும் நாட்களில் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
இன்றைய பங்குச் சந்தையில் ஏபிசி கேப்பிட்டல். ஐடி பீஸ். கல்யாண் ஜுவல்லர்ஸ். மணப்புரம் கோல்டு ஆகிய பங்குச் சந்தைகள் குறைந்துள்ளதாகவும், சிப்லா. கோல்ட் பீஸ். ஐடிசி. கரூர் வைசியா வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments