Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 நாள் ஏற்றத்திற்கு பின் இன்று திடீரென சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!

Siva
வியாழன், 18 ஜூலை 2024 (12:01 IST)
இந்த வாரத்தில் பங்குச்சந்தை திங்கள் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள் ஏற்றம் கண்ட நிலையில் நேற்று மொகரம் பண்டிகை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை திடீரென சரிந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பை பங்குச் சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சற்று முன் 170 புள்ளிகள் சரிந்து 80 ஆயிரத்து 553 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல தேசிய பங்கு சந்தை நிப்டி 57 புள்ளிகள் சார்ந்து 24 ஆயிரத்து 557 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச் சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி பங்குகள் குறைந்துள்ளதாகவும், எச்.சி.எல் டெக்னாலஜி, ஹிந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் நீண்ட நாள் முதலீடு செய்பவர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்து வரும் என்றும் எனவே பங்கு சந்தையில் தகுந்த ஆலோசனை பெற்று நல்ல பங்குகளில் முதலீடு செய்தால் லாபம் பெறலாம் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments