எல்.ஜி நிறுவனத்தின் செல்போன் விற்பனை சரிவடைந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்.ஜி. நிறுவனத்தின் பிரீமியம் வகை செல்போன்கள் அதிக அளவு விற்பனை ஆகாதது மற்றும் வியாபாரத்தை மேம்படுத்த செலவிடப்பட்ட பெரும் தொகை ஆகிய காரணங்களினால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், இதனை ஈடுகட்டும் விதமாக சமீபத்தில் சில புதிய வகை செல்போன்களை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும், அதனால் தங்கள் செல்போன்களின் விற்பனை சூடு பிடிக்கும் எனவும் எல்.ஜி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 293.9 யுவான்கள் வருவாய் ஈட்டிய எல்.ஜி செல்போன் பிரிவு, இந்த ஆண்டு 283.2 யுவான்கள் மட்டுமே வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 3.7 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.