Publish Date: Wed, 02 Jan 2019 (20:43 IST)
Updated Date: Wed, 02 Jan 2019 (20:47 IST)
கடந்த ஆண்டு மே மாதத்தில் பேஸ்புக் மெசஞ்சர் செயலி முழுமையாக மாற்றப்படும் என அற்வித்திருந்தது. அதன்படி, மெசஞ்சரில் பல மாற்றங்கல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மெசஞ்சரில் டார்க் மோட் வசதியை வழங்குவதாக அறிவித்தது. இத்னால் டார்க் மோட் அம்சம் பல்வேறு நாடுகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டார்க் மோட் எப்படி இருக்கும் என வொங் என்பவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். சில ஸ்கிரீன்ஷாட்களையும் அவர் பதிவிட்டார். டார்க் மோட் என்பது பின்னணி நிறங்களை கருப்பு நிறத்திற்கு மாற்றுகிறது.
பேஸ்புக் தரப்பில் டார்க் மோட் அம்சம் இறுதிகட்ட பணிகளில் இருப்பதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.