Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கே போங்கு காட்டிய சீன வலைதளங்கள்! – வரி ஏய்ப்பு அம்பலம்!

Webdunia
வியாழன், 26 டிசம்பர் 2019 (17:20 IST)
சீன ஆன்லைன் பொருட்கள் விற்கும் வலைதளங்கள் இந்தியாவில் வரி இல்லாமல் பொருட்களை விற்க செய்த திட்டங்கள் அம்பலமாகியுள்ளது.

இந்தியாவில் ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் பிரசித்தமாக இருப்பது போலவே அலி எக்ஸ்பிரஸ், க்ளப் பேக்டரி, ஷைன் ஆகிய தளங்களும் பிரபலமாக உள்ளன. இந்த சீன வலைதளங்களில் ஒரு நாளைக்கு சுமார் 2 லட்சம் இந்தியர்கள் பொருட்களை ஆர்டர் செய்கிறார்கள். பண்டிகை காலங்களில் இது மேலும் அதிகரிக்கிறது.

அனைத்து ஆன்லைன் தளங்களுக்கும் இந்தியாவிற்குள் பொருட்களை விற்பதற்கு சுங்க வரி, ஜி.எஸ்.டி ஆகியவை உண்டு. ஆனால் அலி எக்ஸ்பிரஸ் போன்ற நிறுவனங்கள் இந்த வரியை செலுத்தாமல் பொருட்களை டெலிவரி செய்ய நூதனமான முறையை பயன்படுத்தியுள்ளது.

இந்தியாவிற்குள் ஐந்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான பொருட்களை பரிசாக அனுப்ப வழி உண்டு. இந்த பரிசு பொருட்களுக்கு வரிகள் கிடையாது. வெளிநாட்டில் உள்ளவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு பரிசுகள் அனுப்புவதற்காக உள்ள இந்த வசதியை சீன வலைதளங்கள் தங்கள் வசதிக்கு பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது 5 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான பொருட்களை வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்தால் அதை பரிசு பொருள் என்ற ரீதியில் அனுப்பி வைத்து வரி ஏய்ப்பு செய்திருக்கிறார்கள். 5 ஆயிரத்திற்கும் குறைவான பொருட்களுக்கு வரி கிடையாது என்பதால் இந்திய ஆன்லைன் தளங்களில் உள்ள பொருட்களின் விலையை விட, சீன தளங்களில் உள்ள பொருட்களின் விலை குறைவாகவும் உள்ளது. இப்படி பரிசு என்று அனுப்பப்படும் சீன பொருட்களுக்கு இன்வாய்ஸ் வைக்கப்படுவதில்லை. இதன் மூலம் சீன வலைதளங்கள் 40% வரை அவர்கள் வரிகளில் மிச்சப்படுத்தி ஏய்ப்பு செய்துள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவை! மத்திய அரசு அனுமதி! - கட்டணம் எவ்வளவு?

மல்லை சத்யாவின் நடவடிக்கைகள் சரியில்லை.. வைகோ குற்றச்சாட்டால் மதிமுகவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments