Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த வருடம் யாருக்கும் வேலைவாய்ப்பே இருக்காது!? – அதிர்ச்சி தகவல்!

அடுத்த வருடம் யாருக்கும் வேலைவாய்ப்பே இருக்காது!? – அதிர்ச்சி தகவல்!
, திங்கள், 23 டிசம்பர் 2019 (16:17 IST)
நடப்பு ஆண்டில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக அடுத்த ஆண்டில் வேலைவாய்ப்புகள் நிறைய இருக்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

2019ம் ஆண்டு முடிந்து 2020ம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில், பலரும் புதிய வருடம் குறித்து பலத்தரப்பட்ட திட்டங்கள் வகுத்து வருகின்றனர். இந்த ஆண்டில் பொருளாதார சரிவால் ஆட்டோ மொபைல் துறை கடும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் இது அடுத்த ஆண்டும் அதிகரிக்கலாம் என பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

மேலும் தற்போது எந்த பட்டம் பெற்றிருந்தாலும் செய்யக்கூடிய வேலைகள் மிகவும் குறைந்து வருவதாகவும், குறிப்பிட்ட துறை சார்ந்த கல்வி, அனுபவம் பெற்றவர்களையே நிறுவனங்கள் பல பணிக்கு அமர்த்த விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டிலேயே சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளதாகவும், படித்து பட்டம் பெற்ற பலர் தங்கள் துறைரீதியான வேலைகளில் ஈடுபட முடியாமல் கிடைத்த பணிகளை செய்து வருவதாகவும் பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது புதிய தொழில் நிறுவனங்கள் உருவாகும் தன்மை குறைந்துள்ளதாகவும், இதனால் வேலைவாய்ப்புகள் இந்தாண்டை விட அடுத்த ஆண்டு குறைவாகவே காணப்படும் என்றும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூமியில் அதிகபட்சமாக நடந்து செல்லக்கூடிய தூரம் எவ்வளவு தெரியுமா??