Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கிருந்து வருமானம் கிடைக்கும்? பிஎஸ்என்எல்!

Webdunia
செவ்வாய், 22 மே 2018 (12:47 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் நுழைந்ததில் இருந்து மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன. 
 
தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்துகொள்ளவும், வருமானத்திற்காகவும் நிறுவனங்கள் சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்த சலுகை வழங்குவதிலும் போட்டி நிலவி வருகிறது.
 
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள 27 பிஎஸ்என்எல் மண்டல ஆதிகாரிகள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். 
 
இந்த கூட்டம் முடிந்த பின்னர் பிஎஸ்என்எல் அதிகாரிகள் கூறியதாவது, கூட்டத்தில் பிஎஸ்என்எல் வளர்ச்சி குறித்தும் அதன் தேவைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்த ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு சிறப்பு திட்டங்கல் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 
 
சர்சதேச மொபைல் டேட்டா மற்றும் வைபை திட்டங்கள் ஊக்கப்படுத்துதல், வரும் காலங்கலீல் வீடு தோறும் பிராட்பேண்ட் சேவை என பல சேவைகள் கொண்டுவரப்படவுள்ளன. 
 
இதனால், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மொத்த வருவாயில், 81% மொபைல் டேட்டா மூலம் கிடைக்கும், மேலும் தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடும் அளவிற்கு மார்கெட்டிங் துறை செயல்படும் என தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments