தொலைத்தொடர்பு துறையில் ஜியோ நுழைந்தது முதல் மற்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்து வருகின்றனர். மேலும், தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள சலுகைகலை வழங்கி வருகின்றன.
இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவன சேவையில் கடந்த மார்ச் மாதம் மட்டும் சுமார் 40 லட்சம் பேர் இணைந்திருப்பதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
இதில் போர்டபிலிட்டி சேவையின் கீழ் மட்டும் சுமார் 12 லட்சம் பேர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த மாதம் அதிக அளவு பிஎஸ்என்எல் சேவையை ஏன் தேர்வு செய்துள்ளனர் என்றும் காரணம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆம், புதிய சலுகைகள் மற்றும் கூடுதல் சேவைகளின் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறதாம். இடையில் ஏர்செல் சேவை முடங்கியதாலும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவையில் இணைந்தனர்.
மேலும், டெலிகாம் சூழலுக்கு ஏற்ப கவர்ச்சிகர சலுகைகள் தொடர்ந்து அறிவிக்கப்படும் என பிஎஸ்என்எல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.