வீழ்வேன் என்று நினைத்தாயோ...!! திருப்பி அடிக்கும் பிஎஸ்என்எல்

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2019 (19:25 IST)
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு பல சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. இந்த சலுகைகள் அனைத்தும் ஜியோவின் அறிமுகத்திற்கு பின்னரே துவங்கியது. காரணம் ஜியோ அப்படிபட்ட பல சலுகைகளை வழங்கியது. 

 
ஜியோ டெலிகாம் துறையில் வந்த பிறகு மற்ற நிறுவனங்கள் ஆடி போய்தான் இருக்கிறார்கள். இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் மூடப்படவுள்ளதாக வதந்திகள் கிளம்பின. 
 
ஆனால், இப்போது பிஎஸ்என்எல் ஜியோவுக்கு நேரடி போட்டியாக பல சலுகைகளை அடுத்தடுத்து வழங்கி வருகிறது. அந்த வகையில் இப்போது தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.298 விலையில் புதிய சலுகையை அறிமுகம் செய்துள்ளது. 
புதிய ரூ.298 சலுகையில் 54 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஜியோவின் ரூ.297 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது.
 
பிஎஸ்என்எல், ஜியோவுக்கு போட்டியாக சலுகைகளை வழங்கினாலும், ஜியோ 4ஜி சேவையை வழங்கி வருகிறது. பிஎஸ்என்எல் 3ஜி/2ஜி சேவையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த ஷா வந்தாலென்ன? கருப்பு சிவப்பு படை தக்க பாடம் புகட்டும்! முதல்வர் ஸ்டாலின்

ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் விஜய்”: த.வெ.க. தலைவரை விமர்சித்த அமைச்சர் கோவி. செழியன்

விஜய் போட்டாவ வச்சி என் பொண்ணு வாழ்க்கையே போச்சி!.. அட பாவமே!...

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments