ஐபோன் பேட்டரியின் வடிவத்தை மாற்றும் ஆப்பிள்: காரணம் என்ன?

Webdunia
செவ்வாய், 30 ஜனவரி 2018 (14:33 IST)
ஆப்பிள் நிறுவனம் 2018 ஆம் ஆண்டில் வெளியிடவுள்ள ஐபோன் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையதளத்தில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் ஆப்பிள் ஐபோன் பேட்டரி வடிவத்தை மாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  
 
அதன்படி 2018-ல் வெளியாகும் ஐபோன்களில் L வடிவிலான பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது. முழுமையாக வளையும் தன்மை கொண்ட L வடிவிலான பேட்டரிகளை தனது புதிய ஐபோன் X மாடல்களில் பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இதனால் புதிய ஐபோனில் நீண்ட நேர பேட்டரி பேக்கப், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போதைய ஐபோன் X மாடலில் இரண்டு செவ்வக பேட்டரிகளை L வடிவில் வழங்கி இருக்கிறது. 
 
2018 ஐபோன்களில் பயன்படுத்தப்பட இருக்கும் 6.45 இன்ச் ஸ்கிரீன்களை எல்.ஜி. நிறுவனம் விநியோகம் செய்யலாம் என தெரிகிறது. மேலும், எல்ஜி செம் நிறுவனத்துடன் இணைந்து ஆப்பிள் நிறுவனம் L வடிவிலான பேட்டரிகளை தயாரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சீனாவின் கட்டமைக்கப்பட்டிருக்கும் புதிய எல்ஜி தயாரிப்பு ஆலையில் ஐபோன்களுக்கான பேட்டரிகளை தயாரிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்க்கு கை காட்டும் மற்ற கட்சி தொண்டர்கள்!.. இதுதான் ரிசல்ட் என சந்தோஷப்படும் தவெக ஆதரவாளர்கள்!..

முதல்ல உங்க புள்ளைக்கு சொல்லிகொடுங்க!. அப்புறம் முட்டு கொடுங்க!.. எஸ்.ஏ.சி-க்கு கிளாஸ் எடுத்த சேரன்!...

நாளைக்கு தேர்தல்!.. ஓட்டு எப்படி போடணும் தெரியுமா?.. வாங்க பார்ப்போம்!...

2021ல் பாஜக தோற்றது 10% வித்தியாசத்தில் தான்.. ஆனால் SIRல் நீக்கப்பட்ட வாக்காளர்கள் 11.6%.. 2026 தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?

ஐஐடி நுழைவுத்தேர்வில் தோல்வி. 4 ஆண்டு பொறியியல் படிப்பை முடிக்க 6 ஆண்டுகள்.. ஆனால் 1.2 கோடி சம்பளத்தில் வேலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments