திருக்கோவிலூர் பகுதியில் மானிய விலையில் விதை நெல் வாங்கி விவசாயிகள் பயனடைய வேண்டுமென வேளாண்மை உதவி இயக்குநர் ஆறுமுகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருக்கோவிலூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் சம்பா பருவத்துக்கு தேவையான நெல் ரகங்களான சாவித்ரி பொன்னி, பிபிடி-5204, ஆந்திர பொன்னி, ஏடிடீ-39 போன்ற ரகங்கள் போதிய அளவில் இருப்பு இருக்கிறது.
இது விதை கிராம திட்டத்தின் கீழ் 50 விழுக்காடு மானியத்திலும், ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிலோ ஒன்றுக்கு ரூ.5 வீதம் மானியத்திலும் வழங்கப்பட்டு வருகிறது.
இதனை விவசாயிகள் வாங்கி பயனடைய வேண்டுமென செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.