Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூட்டுறவு வங்கிகள் வளர்ச்சி

Advertiesment
கூட்டுறவு வங்கி
அகமதாபாத்: , சனி, 5 செப்டம்பர் 2009 (16:18 IST)
கூட்டுறவு வங்கிகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. கூட்டுறவு வங்கிகளில் செலுத்தப்படும் வைப்பு நிதி 13 விழுக்காடு அதிகரித்துள்ளது. என்று கூட்டுறவு வங்கிகள்- கடன் கடன் சங்கங்களின் தேசிய கூட்டமைப்பு தலைமை செயல் அதிகாரி டி.கிருஷ்ணா தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 2007 மார்ச் இறுதி நிலவரப்படி ரூ. 1 லட்சத்து 17 ஆயிரம் கோடி வைப்பு நிதியாக இருந்தது. இவை அடுத்த வருடத்திற்குள் 13 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இந்த வங்கிகளில் 2008 மார்ச் இறுதி நிலவரப்படி வைப்பு நிதி ரூ. 1 லட்சத்து 38 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த வருடம் புதிய கிளைகளை திறக்க ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்துள்ளது. இதனால் கூட்டுறவு வங்கிகளின் வளர்ச்சி அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.


Share this Story:

Follow Webdunia tamil