இந்திய மைய வங்கியின் (ஆர்பிஐ) நாணயக் கொள்கை வகுப்பு தொடர்பான ஆலோசனை வழங்கும் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மைய வங்கியின் ஆளுநராக உள்ள டி. சுப்பாராவ் தலைமையிலான இக்குழுவில் துணை ஆளுநர் சியாமளா கோபிநாத். உஷா தோராட், கே.சி. சக்ரவர்த்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மைய வங்கியின் நாணயக் கொள்கை, பொருளாதார மதிப்பீடு ஆகியன தொடர்பாக ஆலோசனை வழங்கும் இக்குழுவில் மைய வங்கியின் மத்திய குழுவில் உறுப்பினர்களாக உள்ள எஸ். கங்கூலியும், ஒய்.எச். மலேகாம் ஆகியோரும், வெளி உறுப்பினர்களாக டி.எம். நாச்சேன், சங்கர் ஆச்சார்யா, சமீர் குமார் பரூவா, பி.ஜே. நாயக், ஏ. வாசுதேவன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழு 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதிவரை செயல்படும்.