ஃபிபா உலகக்கோப்பை: இன்றைய ஆட்டங்கள்
Publish Date: Tue, 19 Jun 2018 (13:47 IST)
Updated Date: Tue, 19 Jun 2018 (13:49 IST)
ஃபிபா உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் மூன்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற தென்கொரியா அணிக்கு எதிரான போட்டியில் சுவீடன் அணியும், பனாமா அணிக்கு எதிரான போட்டியில் பெல்ஜியம் அணியும், துனிசியா அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது
இந்நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ‘எச்’ பிரிவில் உள்ள கொலம்பியா- ஜப்பான் அணிகள் மோதுகின்றன.
இதையடுத்து, இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் போலந்து- செனகல் அணிகள் மோதுகின்றன.
அதையடுத்து, ‘ஏ’ பிரிவில் இரவு 11.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ரஷியா- எகிப்து அணிகள் மோதுகின்றன.
அடுத்த கட்டுரையில்