Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹோலிகா தகனம்; ஹோலி கொண்டாடத்தை கூறும் புராண கதை

Webdunia
இரணியன் என்னும் அரக்கன் தன்னையே எல்லோரும் கடவுள் என தொழவேண்டும் என்று எண்ண இரணியனின் மகன் பிரகலாதன், மகாவிஷ்ணு ஒருவரையே கடவுள் என்று போற்றி பூஜித்து வந்தான். இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே கடவுள் என  பூஜிக்கும்படி வற்புறுத்தினான்.
இரணியன் தன் சகோதரி - நெருப்பினால் எரியாத தன்மை படைத்த ஹோலிகாவின் உதவியை நாடினான். தன் மகன் பிரகலாதனை அழிக்கும் பொடுட்டு இரணியன் பிரகலாதனை தன் மடியில் அமர்த்திக் கொண்டு ஹோலிகாவை நெருப்பின் அமரும்படி கூறினான்.
 
மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் அமர்ந்தான் பிரகலாதன். மகாவிஷ்ணுவின் கருணையால் பிரகலாதன் நெருப்பிலிருந்து மீண்டான். ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானதை குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகையன்று வெட்ட வெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில்  எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்கிறார்கள். 
 
இரண்யகசிபுவின் சகோதரி அரக்கி ஹோலிகா இளம் பிரகல்லாதனை நெருப்பில் போட முயன்ற போது அதிலிருந்து வியக்கத்தக்க வகையில் அவர் தப்பித்ததன் நினைவாக நெருப்புகள் மூட்டப்படுகின்றன. ஹோலிகா எரிந்தாள், ஆனால் கடவுள் விஷ்ணுவின் மீது விடாப்பிடியான பக்தி கொண்ட பிரகல்லாதன், தனது  அசைக்க முடியாத தெய்வபக்தியின் காரணமாக எவ்வித காயமும் இன்றி உயிர் பிழைத்தான். ஹோலிகா தகனம், ஆந்திர பிரதேசத்தில் காம தகனம் அல்லது  காமன் எரிப்பு எனக் குறிப்பிடப்படுகின்றது.

தொடர்புடைய செய்திகள்

வீட்டில் விளக்கேற்றும்போது கவனிக்க வேண்டியது என்னென்ன?

வைகாசி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மீனம்!

வைகாசி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கும்பம்!

வைகாசி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

வைகாசி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – தனுசு!

அடுத்த கட்டுரையில்
Show comments