ராஜ் டிவியில் வரும் நவம்பர் மாதம் முழுவதும் கமலஹாசன் நடித்த படங்களும், அதனைத் தொடர்ந்து டிசம்பரில் ரஜினிகாந்த் நடித்த படங்களும் ஒளிபரப்பாக உள்ளன.
ராஜ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பிற்பகல் 1.30 மணிக்கு சினிமா திரைப்படங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒவ்வொரு சிறப்பு விழாக்கள், பண்டிகைகளுக்கு ஏற்றபடி இந்த படங்கள் திரையிடப்படுகின்றன.
அந்த வகையில், நவம்பர் மாதம் 7-ந் தேதி நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள். இதையொட்டி நவம்பர் மாதம் முழுவதும் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பிற்பகல் 1.30 மணிக்கு கமல்ஹாசனின் வெற்றித் திரைப்படங்கள் ராஜ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
அதுபோல, டிசம்பர் 12-ந் தேதி நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் ஆகும். இதையொட்டி டிசம்பர் மாதம் முழுவதும் திங்கள் முதல் வெள்ளி வரை ரஜினிகாந்த் நடித்த ஹிட் படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.