பிரபல நாவல் ஆசிரியர் ராஜேஷ்குமார் எழுதிய திகில் நாவல்கள் தொடராக எடுக்கப்பட்டு கலைஞர் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர்கள் விசாரணை என்ற பெயரில் ஒளிபரப்பாகி ரசிகர்களுக்கு திகிலூட்டி வருகிறது.
ராஜேஷ்குமாரின் நாவல்கள் ஒவ்வொன்றும் திகிலானவை, த்ரில்லானவை. நாவல்களை படிக்கும் போது ஏற்படும் திரில்லும், திகிலும் அவை டி.வி.தொடர்களாக தயாரிக்கப்படும் போது காணாமல் போய்விடும். ஆனால் விசாரணை தொடரை இயக்கும் சி.பிரபுவோ ராஜேஷ்குமாரின் நாவல்களுக்கு கூடுதல் சுவையைக் கொடுத்து விசாரணை தொடரை அமர்க்களப்படுத்தி வருகிறார்.
சென்ற வாரம் ஒளிபரப்பான `காற்று உறங்கும் நேரம்' என்னும் நாவல் படமாக்கப்பட்ட விதமும் பின்னணி இசையும் ரசிகர்களை ரொம்பவே பயமுறுத்தி விட்டது.
இதுவரை ராஜேஷ்குமார் எழுதிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாவல்களில் பல நாவல்கள் வெளிநாட்டுப் பின்னணியில் எழுதப்பட்டவை. அந்த நாவல்களையும் படமாக்கும் எண்ணத்தில் இருக்கிறார்கள் தயாரிப்பாளர் விஜயகுமார், மற்றும் டி.வி.சால்வா.