Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் டிவியில் ஸ்ரீ கிருஷ்ண லீலை ஆர‌ம்ப‌ம்

Advertiesment
விஜய் டிவியில் ஸ்ரீ கிருஷ்ண லீலை ஆர‌ம்ப‌ம்
, வியாழன், 16 ஜூலை 2009 (16:47 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தெய்வீக தொடர்களின் வரிசையில் மற்றுமொரு சாதனை படைக்க தயாராகிவிட்டது ஸ்ரீ‌கிருஷ‌்ண ‌லீலை.

webdunia photoWD
விஜ‌ய் டி‌வி‌யி‌ல் ஆர‌ம்பமா‌கியு‌ள்ள இ‌ந்த தொட‌ர், கோகுல கிருஷ்ணனின் லீலைகள் மூலம் ர‌சிக‌ர்களை‌க் கவர உ‌ள்ளது. வார‌ந்தோறும் திங்கள் முதல் வியாழன் வரை ‌தினமு‌ம் மாலை 7:00 மணிக்கு ஒவ்வொரு நாளும் ஸ்ரீ கிருஷ்ண லீலை தொடரில் வசுதேவ தேவகி தம்பதியருக்கு எட்டாவதாக பிறந்த கிருஷ்ணன், எப்படி நந்தா யசோதா தம்பதியருக்கு மகனாக வளர்கிறான் என்பதில் துவங்கி, அவனது முடிவடையாத லீலைகள், கம்சன் மற்றும் அவன் வாழ்வில் இடையில் வரும் எல்லா அசுரர்களையும் வதம் செய்யும் அரிய காட்சிகள் என எல்லாவற்றையும் இத்தொடரில் காணலாம்!

அசுரர்களை வதம் செய்வது மட்டுமல்லாமல் கோகுலத்தில் அவர் கோபியர்களுடன் செய்யும் லீலைகள், வெண்ணை திருடி யசோதையை படுத்தும் பாடு, ராதாவுடன் நட்பு என கிருஷ்ணபிராணின் எல்லா லீலைகளும் இதில் இடம்பெறும்.

கம்சன் மற்றும் அரக்கர்களை அழிக்க கிருஷ்ணன் மேற்கொள்ளும் நர்த்தன நடனம் என புராணத்தில் வரும் எல்லா கதைகளும் இந்த ஸ்ரீ கிருஷ்ண லீலை தொடரில் இடம்பெறும்.

கட‌ந்த ஜுலை 13‌ம் தே‌தி ‌தி‌ங்க‌ட்‌கிழமை துவ‌ங்‌கிய இ‌ந்த தொடரை வார‌த்‌தி‌ல் 4 நா‌ட்களு‌ம் மாலை 7:00 மணிக்கு க‌ண்டு ம‌கிழு‌ங்க‌ள்.

Share this Story:

Follow Webdunia tamil