சின்னத்திரை நிகழ்ச்சிகள் பற்றிய சின்ன சின்ன தகவல்கள் அடங்கிய தொகுப்பு இது.
நடிகை அனுஹாசன் காவல்துறை அதிகாரியாக நடித்து, கலைஞர் தொலைக் காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ரேகா ஐபிஎஸ் தொடர், 350-வது எபிசோடை நெருங்குகிறது.
சின்னத்திரையில் மிகப் பிரபலமான நடிகர் பாலா, வைகை என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.
கலைஞர் டிவியில் பாரதிராஜா இயக்கும் `தெக்கத்திப் பொண்ணு' தொடரில் இருந்து நடிகர் நெப்போலியனும், ரஞ்சிதாவும் விலகிவிட, அவர்களுக்கு பதிலாக டைரக்டர் ஷரவணசுப்பையாவும், நடிகை புவனேஸ்வரி நடித்துக் கொண்டிருக்கிறார்.
வசந்த் டிவியில் சனிக்கிழமை தோறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, நெற்றிக்கண். அரசியல், மற்றும் சமூக நிகழ்வுகள், சமுதாய பிரச்சினைகளை இந்த நிகழ்ச்சியில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்கிறார்கள்.
நகைச்சுவை நடிகர் விவேக் நடித்த நகைச்சுவை தொடர் விரைவில் சின்னத்திரை ரசிகர்களின் பார்வைக்கு வரவிருக்கிறது. முழுக்க நகைச்சுவையை மையமாகக்கொண்ட இந்த சீரியலில் வித்தியாசமான விவேக்கை பார்க்கலாம்.
ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராகமாலிகா நிகழ்ச்சி 275 வாரங்களை கடந்து விட்டதைக் கொண்டாடும் விதத்தில் சிறப்பு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. ஏற்கனவே ராகமாலிகா நிகழ்ச்சியில் பாடி வெற்றி பெற்ற பாடகர்கள் பங்கேற்று பாடினர். இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது.